ஆங்கில புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.? தெரியுமா.?

Advertisement

New Year Dos and Don’ts in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆங்கில புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய்யக்கூடாது.? என்பதை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். புதிய வருடம் பிறக்கும்போது, அன்றைய நாள் நாம் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும், சில விஷயங்களை செய்யக்கூடாது என்பது காலம் காலமாக பின்பற்றும் வழக்கம் ஆகும்.

ஆனால், நம்மில் பலருக்கும் புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது என்பது தெரிவதில்லை. அதனால், New Year Dos and Don’ts in Tamil பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

மேஷம் முதல் மீனம் வரை 2025 புத்தாண்டு ராசிபலன்கள்.!

New Year’s Day Dos and Don’ts in Tamil:

செய்ய வேண்டியவை:

  • புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து, புதிய ஆடை உடுத்தி கடவுளை வழிப்பட வேண்டும்.
  • கோவிலுக்கு சென்று குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து வழிப்படுங்கள்.!
  • ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.
  • பசுக்களுக்கு அகத்திக்கீரை தானம் செய்ய வேண்டும்.
  • பச்சை கற்பூரம் வாங்கி வீட்டில் பூஜை அறை அல்லது பணப்பெட்டியில் வையுங்கள்.
  • பூஜை அறைக்கு புதிதாக ஒரு விளக்கை வாங்கி வையுங்கள்.
  • வெள்ளி விளக்கு, குபேர விளக்கு போன்ற விளக்குகளை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
  • புத்தாண்டு அன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். புதிதாக ஒரு பொருள் வரும் பொழுது, அதனுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து வரும் என்பது நம்பிக்கை.
  • டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று ஏதேனும் ஒரு பொருளை வாங்கலாம்.

செய்ய கூடாதவை:

  • காலையில் எட்டு மணிக்கு மேல் தூங்குதல் கூடாது.
  • ஆங்கில புத்தாண்டு அன்று மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது பணமாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பொருளாக இருந்தாலும் சரி அதனை பிறருக்கு கடனாக கொடுக்கக் கூடாது. தானம் கொடுப்பது வேறு கடன் கொடுப்பது வேறு. ஆகையால், இந்நாளில் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
  • புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்தல், வீட்டை துடைத்தல், துணி துவைத்தல் போன்றவற்றை செய்தல் கூடாது.
  • புத்தாண்டு அன்று அழுகை கூடாது. ஆண்டின் தொடக்க நாளில் அழுதால் எதிர்மறையான எண்ணங்கள் உண்டாகும்.
  • முக்கியமாக, இந்நாளில் யார் மனதையும் புண்படும்படி பேச கூடாது.
  • வீட்டில் உள்ள சில உணவு பொருட்களை குறைய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரிசி, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கல் உப்பு, ஊறுகாய், நாட்டு சர்க்கரை போன்றவை இல்லாமல் இருக்க கூடாது. அதனை முழுவமாக நிரப்பி வைக்க வேண்டும்.

2025-ஆம் ஆண்டின் பண்டிகை நாட்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement