New Year Resolution Ideas in Tamil | புத்தாண்டு தீர்மான யோசனைகள்!

Advertisement

நியூ இயர் Resolution Ideas | New Year Resolution Ideas in Tamil

இன்னும் கொஞ்சநாட்களில் நியூ இயர் வரப்போகிறது, ஒவ்வொரு நியூ இயர்-லயும் சில பேர் தங்களுக்கான Resolution Goals செட் பண்ணுவாங்க, அந்த இயர் முடியும் பொது அவங்க செட் பண்ண அனைத்து Goals-யும் முடிச்சுட்டாங்கலான்னு கேட்டா அது கேள்விக்குறிதான். சில பேர் முடிச்சிருப்பாங்க சில பேரால முடிக்கமுடியாம போகிடும். அது என்ன காரணம்னா மனநிலை, நிலைத்தன்மை மற்றும் செயல். இதனாலேயே சில பேர் Resolution எடுக்குறதையே விட்டுடுறாங்க, வாழ்க்கை போற போக்குல நம்மளும் வாழ்ந்துட்டு போவோம்னு இருகாங்க.

ஆனா அது ஒரு விசயத்துல நல்லதா இருந்தாலும், அந்த வருஷத்துல நம்ம என்ன பண்ணிருக்கோம்னு திரும்பி பார்த்த ஒன்னுமே இருக்காது. இந்த Goals செட் என்பது எல்லாருக்கும் பொதுவானதுதான். இந்த பதிவுல நாங்கள் New Year Resolution Ideas in Tamil for Students பத்தி முழுவதுமா சொல்லிருக்கோம்.

Students மட்டும் இல்லாமல் Resolution எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் இந்த பதிவை பார்த்து, நீங்களும் உங்கள் Resolution Goal- ஐ செட் செய்து வரும் வருடத்தில் உங்கள் இலக்குகளை நிறைவேற்றுங்கள்.

New Year Resolution Ideas in Tamil for Students

  • சிறப்பாகப் படிக்கவும்
  • உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
  • புது மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து நிறைய நல்லதை கற்றுக்கொள்ளலாம்.
  • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்.
  • Grades-காக மட்டுமின்றி அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்.
  • நாளை நாளை என்று தள்ளிப்போடாமல் அன்றே இந்த வேலையை முடிக்கலாம்.

நாம் கீழே சில முக்கியமான புத்தாண்டு தீர்மான யோசனைகள் பார்க்கலாம்.

  • ஆரோக்கியம் (Health)
  • Panam (Money)
  • சாகச இலக்குகள் (Adventures Goals)
  • பங்களிப்பு இலக்குகள் (Contribution Goals)
  • புது பழக்கம்
  • குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்
  • டைரி எழுதுங்கள்
  • நிகழ்காலத்தில் இருங்கள்
  • கெட்ட பழக்கங்களை கைவிடலாம்
  • சேமிப்பு
  • தூக்கம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

ஆரோக்கியம் (Health):

நம்முடைய ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம்னு பாக்கணும், அதற்கு சரியான தூக்கமே, நல்லா சத்து நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சி. இதெல்லாம் நீங்க தொடர்ந்து follow பண்ணனும்.

Panam (Money):

நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது பணம், போன வருடத்தில் நாம் எவளோ சம்பாதித்தோம், இந்த வருடத்தில் நம்மால் எவளோ சம்பாதிக்கமுடியும் என்பதை பற்றி யோசித்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை கையாளவேண்டும்.

சாகச இலக்குகள் (Adventures Goals):

உங்களுக்கு அடிக்கடி தோன்றக்கூடிய செயல், இதை ஒருதடவையாவுது செய்து பார்க்க வேண்டும் அல்லது இங்கு ஒரு ஒருதடவையாவுது செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருப்பீர்கள். அதை இந்த வருடத்தில் மேற்கொள்ளலாம்.

பங்களிப்பு இலக்குகள் (Contribution Goals):

நம்மால் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியும். எப்படியென்றால் பணம் கொடுத்தோ, அல்லது பிறருக்கு கல்விகொடுத்தோ இப்படி உதவலாம்.

புது பழக்கம் (New Habit):

இந்த புத்தாண்டை புது பழக்கத்துடன் தொடங்குவது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். தினமும் புத்தகம் படித்தல், வீட்டை சுத்த படுத்துதல், மரங்கள் நடுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களை புதிதாக செய்து மாற்றத்தை உருவாக்குங்கள்.

குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள் (Spend Time With Family):

நாம் அனைவரும் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவாகியுள்ளது. இந்த டிஜிட்டல் வாழ்க்கையில் வருகிற புதிய ஆண்டில் இருந்து நம் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

டைரி எழுதுங்கள் (Write a Diary):

இந்த காலத்தில் யாரும் பெரிதாக டைரி எழுதுவதில்லை. டைரி எழுதுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். உங்களுடைய ஆசை, கனவு மற்றும் இலட்சியத்தை ஒரு டைரியில் எழுதி வையுங்கள், நீங்கள் அதை பார்க்கும் பொழுது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வீரியம் ஆகி உங்கள் இலக்குகள் கண்டிப்பாக நிறைவேறும். தினசரி நிகழ்வு, மனதை பாதித்த சம்பவங்களை மீண்டும் திரும்பி பார்கும் போது, நீங்கள் வடித்த கண்ணீர் கூட பயனற்றது என புரியலாம்.

நிகழ்காலத்தில் இருங்கள் (Stay in the Present):

கடந்த காலத்தை நினைத்து கவலை கொள்ளாமல் நிகழ் காலத்தில் என்ன நடக்கிறது என்று கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். இப்போது இருக்கும் நாட்களை தவறவிட்டால், பிற்காலத்தில் இந்த நாட்களை நினைத்து கவலைப்பட வேண்டி இருக்கும். மனதை போட்டு குழப்பாமல், அனைத்தையும் புன்னகையுடனும், தைரியத்துடனும் வரவேறுங்கள்.

கெட்ட பழக்கங்களை கைவிடலாம் (Give up Bad Habits):

நம்மை வளர விடாமல், ஒரே இடத்தில் தேங்கி நிற்க வைக்கும் கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பது நமக்கு நன்றாக தெரியும். இந்நிலையில், நீங்கள் மாற்ற நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் கெட்ட பழக்கங்களை கைவிடுவது உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடாக அமையும்.

சேமிப்பு (Savings):

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சிறிதளவாவது சேர்த்து வையுங்கள். உங்கள் கஷ்ட காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சேமிப்பு பணம் இருக்கும். இப்போதே உங்கள் பணத்தை எப்படி சேமிக்கலாம், எவ்வளவு சேமிக்கலாம் என்று திட்டமிடுங்கள். புதிய ஆண்டில் சேமிப்பு பழக்கத்தை கொண்டுவாருங்கள்.

தூக்கம் (Sleep):

தினமும் 8 மணிநேரம் தூங்கினால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் யாரும் சரியான நேரத்திற்கு தூங்குவதில்லை, மொபைல் போன் உபயோகித்து கொண்டு நாடு ராத்திரி வரை கண் விழித்து கொண்டு இருக்கின்றனர். இதனால் உடல் சோர்வு அடையும், உடல் ஆரோக்கியம் மோசமாகும். இந்த புதிய ஆண்டில் இருந்து அனைவரும் மொபைல் போன் உபயோகிக்காமல் 8 மணி நேரம் சரியாக தூங்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

இந்த முக்கியமான 11 New Year Resolution Ideas in Tamil பின்பற்றினால் இந்த வருடமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

New Year Quotes in Tamil

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement