Nombu Vaikum Niyat in Tamil
இந்துக்கள் முறையில் கடவுளை வழிபடும் போது எப்படி விரதம் இருந்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றதோ அதேபோல், இஸ்லாமியர் வழக்கத்திலும் இருக்கிறது. ரம்ஜான் வருவதற்கு முன் நோன்பு இருப்பார்கள். இவை அனைவரும் அறிந்தது, இந்த நாட்களில் அதிகாலையிலே உணவை சாப்பிட்டு விடுவார்கள், அதன் பிறகு தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பார்கள்.
இந்த தொழுகையில் நிய்யத் என்பது அவசியமாக இருக்கிறது. இந்த நிய்யத் என்பதை பலரும் தவறான கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் நிய்யத் என்றால் என்ன.? அதற்கான அர்த்தம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
நிய்யத் என்றால் என்ன.?
நிய்யத் என்பது சில வாசகங்களை வாயால் மொழிவது என்று நினைக்கிறார்கள், ஆனால் இது தவறான ஒன்று. ஏனென்றால் நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் நினைப்பது, தீர்மானம் செய்தல் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
ரம்ஜான் நோன்பு எடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!
பொதுவாக நோன்பு இருப்பவர் காலையில் சாப்பிட்டதோடு அதன் பிறகு தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பார்கள். நோயாளி போல எதையும் உண்ணாமல் இருப்பார்கள். ஆனால் வீட்டில் ஏதும் உணவில்லை, அதனால் தான் சாப்பிடாமல் இருக்கிறேன் என்று எண்ணுதல் கூடாது. இது போல நினைப்பது நிய்யத் கிடையாது. இரவு தூங்கி மறுநாள் நோன்பு என்று நினைவில்லாமை இருப்பதும் நிய்யத் கிடையாது.
எடுத்துக்காட்டாக ஒருவர் ரமலான் காலத்தில் எப்போதும் எந்திருப்பதை விட அதிகாலையில் எழுந்திருக்கிறார். சாப்பிடும் நேரமும் மாறிவிட்டது. இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் அவர் மனதில் இயல்பாகவே நோன்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஏன் இன்னும் சொல்லப்போனால் இரவு தூங்க போதும் கூட காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் தூங்க செல்கிறார். இவை தான் நிய்யத் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக கூறினால் நிய்யத் என்பது மனதால் நினைக்க வேண்டும்.
நியத்தின் வாசகத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
நவைத்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |