Nutmeg in Tamil Name
பொதுவாக பள்ளியில் படிக்கும் போது மரங்களின் பெயர்கள், செடிகளின் பெயர்கள் போன்றவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்திருப்போம். அதன் பிறகு அதனை நாம் படித்திருக்க மாட்டோம். நாளடைவில் நம் பிள்ளைகளோ பக்கத்து வீட்டு பிள்ளைகளோ இந்த வார்த்தைக்கான தமிழ் பெயர் என்னவென்று கேட்டால் நமக்கு தெரிந்திருக்காது. பிள்ளைகள் கேட்கும் போது அதற்கான பதிலை DITIONARY-யை புரட்டிய காலமெல்லாம் போகிவிட்டது. ஏனென்றால் இப்போது தான் எல்லாரும் கையில் போன் உள்ளதே. அதனால் இதிலையே அதற்கான பதில் வந்து விடுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் நட்மெங் என்பதற்கான அர்த்தத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Nutmeg in Tamil Name:
நட்மெங் என்பதற்கான தமிழ் பெயர் சாதிக்காய் மற்றும் ஜாதிக்காய் என்று அழைக்கலாம்.
ஜாதிக்காய் பற்றிய தகவல்:
சாதிக்காய் மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில்ஒன்றாக இருக்கிறது. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மமரமாக காணப்படுகிறது.
சாதிக்காய்ப்பழம், சாதிக்காயின் மேல் ஓடு போன்றவற்றிலிருந்து பெறப்படும் இரண்டு நறுமணப் பொருள்களால் சாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சாதிக்காய் மரத்தின் விதையானது முட்டை வடிவத்துடன் காணப்படும். இவை 20 மில்லி மீட்டர் முதல் 30 மில்லி மீட்டர் நீளமும், 15 முதல் 18 மில்லி மீட்டர் அகலமும் உடையதாக இருக்கும்.
என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது:
சாதிக்காயில் மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பல பி வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
சாதிக்காய் நன்மைகள்:
சாதிக்காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
இவற்றில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்க் உதவுகிறது.
ஜாதிக்காய் ஆனது தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஒரு கிளாஸ் பாலில் சிறிதளவு ஜாதிக்காயை சேர்த்து குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
இந்த விதையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயை வலி உள்ள இடத்தில் வலி சரியாகிவிடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |