ஜாதிக்காய் பற்றி பலரும் அறியாத தகவல்கள்..! இதோ உங்களுக்காக..!

Advertisement

Nutmeg in Tamil

வாசகர்களே தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு எங்கள் Pothunalam.Com பதிவு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சரி நான் நேராக விஷயத்தை கூறுகிறேன். நீங்கள் ஜாதிக்காயை பார்த்திருக்கிறீர்களா..? அப்படி என்றால் ஜாதிக்காய் பற்றிய தகவல் (Nutmeg in Tamil) உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. தெரியவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. இன்று நாம் ஜாதிக்காய் பற்றி பலரும் அறியாத தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஜாதிக்காய் பற்றிய தகவல்கள்: 

ஜாதிக்காய் பற்றிய தகவல்கள்

சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. அதாவது மிரிஸ்டிகா இனத்தின் பல மர வகைகளின் விதை, அல்லது அந்த விதையிலிருந்து பெறப்பட்ட மசாலாப் பொருள் ஆகும்.

ஜாதிக்காய் என்பது நறுமணமுள்ள ஜாதிக்காய் மரத்தின் விதையை (Myristica fragrans) பொடியாக அரைத்து தயாரிக்கப்படும் மசாலா ஆகும். இது இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பசுமையான மரமாகும்.

முலாம்பழம் சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் இம்மரம் மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இனத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஜாதிக்காயின் மரம் அதன் பழங்களிலிருந்து பெறப்பட்ட இரண்டு மசாலாப் பொருட்களுக்காக ஜாதிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.

அதாவது சாதிக்காயின் பழம், சாதிக்காயின் மேல் ஓடு போன்றவற்றிலிருந்து பெறப்படும் இரண்டு நறுமணப் பொருள்களால் தான் ஜாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜாதிக்காயின் முக்கிய உற்பத்தியாளராக இந்தோனேஷியா இருந்து வருகிறது.

நீங்க வில்வ பழத்தை பார்த்திருக்கிறீர்களா.. அப்போ இதை தெரிஞ்சிக்கலனா எப்படி

ஜாதிக்காய் வளரும் தன்மை: 

ஜாதிக்காய் வளரும் தன்மை

ஜாதிக்காய் முரட்டுத்தனமான முட்டை வடிவத்திலானது 20 முதல் 30 mm நீளமாகவும் 15 முதல் 18 mm அகலமாகவும் உலர்ந்த நிலையில் 5 மற்றும் 10 கிராம் இடைப்பட்ட எடை இருக்கும்.

இந்த ஜாதிக்காய் மரத்தில் இருந்து எண்ணெய்கள், வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய், பிசின் மற்றும் ஜாதிக்காய் வெண்ணெய் உள்ளிட்ட பல வணிகப் பொருள்களை இந்த மரத்திலிருந்து உற்பத்தி செய்ய முடியும். சாதிக்காயின் மேற்பரப்பை எளிமையாகத் தூளாக்க முடியும்.

ஜாதிக்காய் ஊட்டச்சத்துகள்:

ஜாதிக்காயில் 1.08 கிராம் கார்போஹைட்ரேட், 0.13 கிராம் புரதம், கொழுப்பு 0.8 கிராம் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. ஜாதிக்காய் ஒரு சிறிய அளவு வைட்டமின் A, ஃபோலேட், கோலைன் மற்றும் வைட்டமின் C காணப்படுகிறது.  மேலும் ஜாதிக்காயில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 ஜாதிக்காய் பயன்கள்

சீத்தாப்பழத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா.. இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement