October 2 Special Day in India
மனிதனமாக பிறந்த அனைவருக்கும் அவர் அவரது பிறந்த நாள் எப்போதுமே சிறப்பான ஒன்றாக தான் இருக்கும். ஏனென்றால் அன்று தான் இந்த உலகத்தில் பிறந்து வாழ தொடங்கியதால் நாம் எப்போதும் அத்தகைய நாளினை மறப்பதே இல்லை. அந்த வகையில் நமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாளினையுமே எப்போதுமே மறக்க மாட்டோம். முந்தைய காலகட்டங்களில் ஒருவரின் பிறந்த நாள் என்றால் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு மிட்டாய் வழங்குவதோடு மட்டுமே முடிந்து விடும். ஆனால் இந்த நவீன கலாத்தில் பிறந்தநாளுக்கு பார்ட்டி வைப்பது, புதிய ஆடை எடுப்பது மற்றும் வெளி ஊர்களுக்கு செல்வது என இதுபோன்ற கலாச்சாரங்களாக மாறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் ஒரே ஒருவரின் பிறந்த நாளினை இந்தியா ஆனது மிகவும் சிறப்பாக கொண்டாடுவதோடு மட்டும் இல்லாமல் பள்ளி முதல் கல்லூரிகள் என அனைத்திற்கு விடுமுறையும் அளிக்கப்படுகிறது. ஆகவே அது என்ன தினம் எதனால், யாருக்கு பிறந்த நாள் என அனைத்தினையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அக்டோபர் 2 என்ன தினம்:
வருடங்கள் தோறும் இந்தியாவில் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி என்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்கள் குஜராத் மாநிலத்துள்ள போர் பந்தர் என்னும் ஊரில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார்.
இவரது பெற்றோர் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்லிபாய் என்பது ஆகும். இவர் இந்தியா முழுவதும் நல்ல பெயரினை பெற்றிருந்தாலும் கூட காந்தியின் தாய்மொழி என்பது குஜராத்தி ஆகும்.
காந்திஜி அவர்கள் 13 வயதிலேயே கஸ்தூரிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு 4 தவப்புதல்வர்களையும் பெற்று எடுத்தார்.
அதேபோல் காந்தி அவர்கள் இளம் வயதில் பள்ளி படிப்பினை அந்த அளவிற்கு கற்கவில்லை என்றாலும் கூட தனது 18-வது வயதில் பள்ளிப்படிப்பினை படித்து முடித்துவிட்டு அடுத்த நிலையாக இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் படிப்பினை படித்தார்.
வழக்கறிஞர் படிப்பினை முடித்து திரும்பிய காந்தி அவர்கள் சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். அதன் பிறகு அத்தகைய பணியில் இருந்து பாதிலேயே விலகி தென்னாபிரிக்கா சென்றார்.
இதனை தொடர்ந்து தென்னாபிரிக்கா வந்த காந்தி அங்கே நடந்த கொடுமைகளை எல்லாம் கண்டு ஒரு போராட்ட வீரனாக மாற வேண்டும் என்ற ஆர்வத்தினை கருத்தில் கொண்டு செயல்பட்டார்.
மகாத்மா காந்தி அவர்கள் எளியமையான வாழ்க்கையினை வாழ்ந்து பிரிட்ஸ்க்காரர்களின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு, தண்டியாத்திரை மற்றும் உப்பு சத்தியாகிரகம் என பல போராட்டங்களை அகிம்சை முறையில் மேற்கொண்டு சிறைக்கும் சென்றார்.
இத்தகைய பல போராட்டங்களுக்கு பின்பு இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு ஜனவரி மாதம் 1948-ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி அவர்கள் தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மஹாத்மா காந்தியின் மறைவிற்கு பிறகு இந்தியாவில் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாகவும், அக்டோபர் 2-ஆம் தேதி அவரது பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
மேலும் காந்திக்கு கருப்பு காந்தி என்ற மற்றொரு பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்
சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |