உங்களின் அலுவலகத்தில் விளையாடும் விளையாட்டு போட்டிகளின் பட்டியல்

Advertisement

Office Games in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நாம் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் இடத்தில் எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் அது அனைத்தையும் மறந்து ரிலாக்ஸாக இருக்கும் விதமாக உங்களின் அலுவலகத்தில் விளையாட்டுகளை விளையாடுவார்கள். சில விளையாட்டுகள் விளையாடுவதற்கு இடம் இல்லையெனில் சின்ன சின்ன விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளையாட்டுகளை சொல்லி விளையாடுவார்கள். ஆனால் நமக்கு தெரிந்தது அனைத்துமே ஓடி புடிச்சி, கண்ணாமூச்சி மட்டுமே அதிகளவு விளையாட்டுகளை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இல்லை ஆனால் பெரிய பெரிய கம்பெனியில் விதவிதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

அவர்கள் சொல்வதை விளையாடும் போது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல் நமக்கும் விளையாட்டுகளை தெரிந்திருக்க வேண்டும். அவர்களை நாமும் விளையாட வைக்க வேண்டும் அல்லவா இல்லையென்றால் நமக்கு மேல் இருக்கும் அதிகாரிகளை விளையாட வைக்க வேண்டும். அவர்களுக்கும் இதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். ஆகவே நிறைய விதமான விளையாட்டுகளை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Top 10 office Games in Tamil:

  1. Guess That Baby
  2. Heads Up
  3. Two Truths and a Lie
  4. Touch me and I’ll tell you
  5. music chair
  6. best friend gifts
  7. Guess That movie
  8. Find the ingredients in it
  9. Prank Wars
  10. Half you and half me

Guess That Baby:

இந்த விளையாட்டுடைய பெயர் என்னவென்றால் என்னைக்கண்டுபிடி என்பது தான் உடனே கண்ணாமூச்சி என்று நினைக்க வேண்டாம் ஆனால் இது வேற. அலுவலகத்திற்கு வரும் போது நீங்கள் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் அனைவரின் புகைப்படத்தை ஒன்றாக வைக்க வேண்டும். அப்போது டாஸ் போட்டு 5 பேர்களை கொண்ட குழுவாக உருவாக்கி அதில் புகைப்படத்தை காண்பித்து உங்களை கண்டுபிடிக்க வைக்க  வேண்டும்.

Heads Up:

இந்த விளையாட்டின் நோக்கம் உங்கள் அலுவலகத்தில் இருக்கும் அணிகளை 3 குழுவாக 3 பேர்களை பிரித்துக்கொள்ள வேண்டும் அதன் பின் அதில் இருக்கும் ஒருவரை தனியாக கூப்பிட்டு அவர்களுக்கு ஒரு விதமான படத்தை காண்பித்து அதில்இருக்கும் படத்தை மற்ற இருவருக்கும் நடித்து அதனை கண்டுபிடிக்க வேண்டும்.

Two Truths and a Lie:

இந்த விளையாட்டின் பெயர் நான் பொய் சொல்கிறேனா இல்லை உண்மை சொல்கிறேனா என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது அனைவருமே ஒன்றாக உட்கார்ந்து யாருக்கும் தெரியாத அவர்களை பற்றிய ஒன்றை சொல்லி மற்றவர்களை அது உண்மையா பொய்யா என்பதை சொல்ல வேண்டும்.

Touch me and I’ll tell you:

இந்த விளையாட்டு அனைவரின் பெயர்களை சீட்டில் எழுதி யாராவது ஒருவரின் சீட்டை எடுத்து அதில் உள்ளவர்களுக்கு கண்களை கட்டிவைக்கவும். பின் அவர்களை ஒருவர் தொடவேண்டும் அது யார் என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

The only place is Vita Pochi:

இந்த விளையாட்டு அனைவருக்கும் தெரியும் ஆனால் இது அந்த விளையாட்டு இல்லை ஏனென்றால் இந்த விளையாட்டின் ஒரு நாற்காலி தான் இருக்கும் அதனால் அந்த நாற்காலியில் உட்கார்ப்பவர்கள் அந்த போட்டியிலிருந்து விடுபட்டு வெளியே வருவார்கள் கடைசியில் இருப்பவர்களுக்கு தான் பெரிய ஆப்பு என்று சொல்லாம் ஆனால் அவர்களுக்கு மிகவும் நகைச்சுவையாக என்ன வேண்டுமென்றாலும் செய்ய சொல்லாம்.

Best Friend Gifts:

இது கேம் என்று சொல்வதை விட ஐஸ் வைக்கிறது என்று சொல்லாம். காரணம் ஒவ்வொருவரும் ஒருவரை குறிவைச்சி அவர்களுக்கு கிபிட் வாங்கி கொடுக்கலாம். அதாவது ஒருவரை ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் அவர்களிடம் எதார்த்தமாக பலமுறை சண்டை வந்திருக்கும். அதற்கு Sorry சொல்லும் விதமாக ஒரு கிபிட் வாங்கி கொடுத்துவிடலாம்.

Guess That movie:

ஒரு படத்தில் உள்ள காமெடி வார்த்தையை நடித்து காண்பித்து அதனை நடித்து கண்டுபிடிக்கவும்.

Find the ingredients in it:

ஒரு படத்தில் உள்ள பொருட்களை ஞாபகம் வைத்து அதனை ஒவ்வொன்றாக சொல்லவேண்டும். இதை இரண்டு அணிகளாக விளையாடவேண்டும். அதிக பொருட்கள் சொல்பவர்கள் போட்டியின் வெற்றி அணியாகும்.

Prank Wars:

இது ஒரு விளையாட்டு போல் விளையாடாமல் அனைவரும் கூடி இருக்கும் போது உங்களின் அலுவலக்கத்தில் பேசாதவர்களிடம் வம்பு வரவைத்து அவர்களிடம் தப்பு இல்லாத பொழுதும் அவர்களை நீங்களே சண்டை வரவழைத்து அவர்களை பேசவைக்கவும் அல்லது அவர்களை அழுகவைக்கவும். கடைசியில் அவர்களுக்கு கிபிட் கொடுத்து prank  என்று சொல்ல வேண்டும்.

Half you and half me:

இப்போது இரு அணியிலிருந்து ஒரு நபர்கள் வந்து அவர்களுக்கு ஒரு ஜூஸ் அல்லது வேறு எதாவது ஒன்றை கொடுத்து அவர்களை குடிக்க வைக்கவேண்டும். அப்போது யார் அதிக வேகமாக குடிக்கிறார்களோ அவர்கள் இந்த போட்டியின் வெற்றியாளர்கள்.

தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement