வீட்டில் இருந்த படியே பட்டா வாங்குவது எப்படி.?

Advertisement

பட்டா வாங்குவது எப்படி.?

நீங்கள் நிலம் அல்லது வீடு அல்லது ஏதவாது சொத்து வாங்கினால் அதற்கான பத்திரத்தை பெறுவோம் அல்லவா.!பத்திரம் என்பது யாருடைய சொத்தை யார் பெயரில் இருந்து யார் வாங்கியிருக்கிறார் போன்ற விவரம் இருக்கும். அதுவே பட்டா என்பது நிலத்தின் சர்வே எண், உரிமையாளரின் பெயர், நிலா வகை போன்ற எல்லா விவரங்களும் கொடுக்கப்ட்டிற்கும். இந்த பட்டாவை வாங்குவதற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வாங்குவோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி.?

பட்டா பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.

பட்டா மாறுதல் விண்ணப்பிக்க’ அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு செல்லும்.

ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி

இதில் சென்று பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். பிறகு OTP வரும்.

அதை கொடுத்து LOG IN  செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளப்படும்.

பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன? தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி

தொடர்ந்து மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்ற நில விவரங்களை கொடுக்க வேண்டும்.

பாகப்பிரிவினை பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப்பத்திரம் போன்ற ஏதேனும் ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), குடியிருப்பு சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் கொடுக்க வேண்டும். டாக்குமெண்ட் வடிவில் இதனை வலைதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.

இதற்கான  கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 ரூபாயும்,  உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்திய பிறகு நீங்கள் பதிவிட்ட நம்பருக்கு பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதி மற்றும் விண்ணப்ப எண் பெறப்பட்டது என்றும் நீங்கள் செலுத்திய தொகை பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மெசேஜாக வரும்.

பெற்றோர்கள் இல்லாத சொத்திற்கு பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement