இங்க அடிச்சா அங்க கேக்கும்- “ஊராட்சி மணி”
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஊரக வளர்ச்சித் துறையின் முக்கியப் பொறுப்பாகும். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைய திட்டங்கள் மூலம் ஊரக வளர்ச்சித் துறை பூர்த்தி செய்து கொண்டுவருகிறது. கிராமப்புற பொதுமக்களின் பயன்பாடு தடைபட்டால் அல்லது தாமதம் ஏற்பட்டால், இந்த சேவைகளை உடனடி அணுகலை வழங்க, ‘ஊராட்சி மணி‘ தொடர்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. ஊராட்சி மணி என்ற சொல் மனுநீதி சோழனின் புராணக்கதையை வைத்து உருவாக்கப்பட்டது. அதில் பசுவிற்கு எப்படி நியாயம் கிடைத்ததோ அதே போல் மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களால் தொடங்கப்பட்டதுதான் இந்த திட்டம்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் சேவைகளில் ஏதும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் 155340 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கச்சொல்லலாம்.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப்.. இனி அனைத்தும் ஒரே ஆப்பில்.
ஊராட்சி மணி திட்டம் என்றால் என்ன? | ooratchi mani thittam endral enna
கிராம மக்களின் அத்யாவசிய தேவைகளான
- குடிநீர்
- தெருவிளக்கு
- சாலைகள்
- திடக்கழிவு மேலாண்மை
- கழிவு நீர் மேலாண்மை
- சமுதாய சொத்துகளை பாதுகாத்தல்
- பராமரித்தல்
- உருவாக்குதல்
- இடுகாடு
- சுடுகாடு
இது போன்ற நிறைய கிராமத்தில் ஏற்படும் பிரச்சனையை போக்க உருவாக்கியது தான் இந்த ஊராட்சி மணி.
ஊராட்சி மணியை பயன்படுத்துவதற்கு தேவையான தகவல்கள்
நீங்கள் இந்த ஊராட்சி மணியை பயன்படுத்தி ஏதும் புகார் கொடுக்கபோகிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீங்கள் கொடுத்துதான் அவர்களை தொடர்பு கொள்ள முடியும்.
- பெயர்
- முகவரி
- மொபைல் எண்
- ஊராட்சியின் பெயர்
- ஒன்றியத்தின் பெயர்
- மாவட்டத்தின் பெயர் போன்றவைகளாகும்.
எப்படி ஊராட்சி மணியை பயன்படுத்தி புகார் கொடுப்பது?
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் 155340 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
புகார்தாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதில் அளிக்கப்படும். எந்தப் பிரச்சனையும் கவனிக்கப்படாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படாவிட்டால், புகார் தானாகவே அடுத்த நிலை அதிகாரியிடமிருந்து ஊரக வளர்ச்சி இயக்குனரகத்தின் உயர் அதிகாரிக்கு மாறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |