ஓரெழுத்து சொற்கள் 42
இன்றைய காலத்தில் பலரும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக தங்களை பலரும் தயார்படுத்தி வருகிரார்கள். அரசு தேர்வான குரூப் 4 தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வருகிறவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் குரூப் 4 தேர்வில் அதிகமாக தமிழ் பாடத்திலிருந்து தான் கேட்கப்படுகிறது. நீங்கள் தமிழில் நன்றாக ப்ரிபேர் செய்திருந்தாலே தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும். இந்த பதிவில் ஓரெழுத்து சொற்கள் என்றால் என்ன..ஓரெழுத்து சொற்கள் 42 பொருள்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஓர் எழுத்து சொற்கள் என்றால் என்ன.?
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கிறது, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் மட்டும் ஓரெழுத்து சொல்லாக இருக்கிறது. ஒரு எழுத்து தனியாக இருந்து அவை பொருள் தருவதாக இருந்தால் அவற்றை ஓர் எழுத்து மொழி என்று கூறுவார்கள்.
ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.
தனிப்பட்ட ஓர் எழுத்து பொருள் தருவதுண்டு. ஆ, பூ, தா, போ போன்ற சொற்கள் ஓர் எழுத்தாக நின்று பொருள் தருவதால் அவை ஓரெழுத்து ஒருமொழிகளாகும்.
Oru Eluthu Sorkal 42:
ஓர் எழுத்து | பொருள் | ஓர் எழுத்து | பொருள் |
ஆ | பசு | மை | இருள் |
ஈ | பறவை | மோ | மோதுதல் |
ஊ | இறைச்சி | தா | கொடு |
ஏ | கணை | தீ | நெருப்பு |
ஐ | தலைவன் | தூ | தூய்மை |
ஓ | வியப்பு | தே | தெய்வம் |
மா | பெரிய | தை | மாதம் |
மீ | மேல் | சா | சாதல் |
மூ | மூப்பு | சீ | இலக்குமி |
மே | மேன்மை | சே | எருது |
Tamil Oru Eluthu Sorkal 42:
ஓர் எழுத்து | பொருள் | ஓர் எழுத்து | பொருள் |
சோ |
மதில் | நோ |
வலி |
பா |
பாட்டு | கா |
பாதுகாப்பு |
பூ |
மலர் | கூ |
வெல் |
பே |
நுரை | கை |
ஒப்பணை |
பை |
பசுமை | கோ |
அரசன் |
போ |
செல் | வீ |
மலர் |
நா |
நாக்கு | வை |
வைக்கோல் |
நீ |
முன்னால் இருப்பவர் | வௌ |
கைப்பற்றுதல் |
நே |
அருள் | யா |
கட்டுதல் |
நை |
இகழ்ச்சியை குறிப்பத்து | நொ |
துன்பம் |
து |
உணவு | வா |
அழைத்தல் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |