1 பவுன் தங்கம் எத்தனை கிராம் என்று தெரியுமா?

Oru Pavun Thangam Tthanai Gram

Oru Pavun Thangam Ethanai Gram

தங்கம் என்றால் பொதுவாக அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு உலோகம் ஆகும். குறிப்பாக பெண்கள் தங்கத்தில் செய்யப்பட்ட ஆபரணங்களை அதிகம் விரும்பி அணிந்துகொள்வார்கள். இந்த சமுதாயத்தில் தங்க ஆபரணங்களை அணிந்திருப்பவர்களை அதிகம் மதிப்பதும் உண்டு. பலருக்கு ஒரு பவுன் தங்கம் எத்தனை கிராம் என்று தெரிந்திருக்கும். இருப்பினும் சிலருக்கு ஒரு பவுன் தங்கம் எதனை கிராம் என்று அதிக சந்தேகம் இருப்பதும் உண்டு. அவர்களுக்கான பதிவு தான் இது இங்கு 1 பவுன் தங்கம் எத்தனை கிராம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

1 பவுன் தங்கம் எத்தனை கிராம் என்று தெரியுமா?

விடை: ஒரு பவுன் அல்லது சவரன் என்பது 8 கிராம் ஆகும்.

தங்கம் பற்றிய சில தகவல்கள்:

22 காரட் என்பது 1 கிராம் (1000 மில்லி கிராம் ஆகும்), 916 மில்லி கிராம் தங்கமும் 84 மில்லி கிராம் செம்பு ஆகும்.

23 காரட் என்பது 1 கிராம் (1000 மில்லி கிராம்) 958 மில்லி கிராம் தங்கமும் 42 மில்லி கிராம் செம்பு ஆகும்.

24 காரட் தான் சுத்த தங்கம்.

சேதாரம் என்பது தங்க நகை செய்யும் போது சிதறும் தங்கத்தின் அளவு (உண்மையில் அப்படி இல்லை, இது ஒரு ஏமாத்து வேலை, இதில் தான் லாபம் பார்க்கிறார்கள்)

சேதாரம் 10% என்பது நாம் வாங்கும் மொத்த எடையில் பத்து % சேதாரமாக கணக்கிட்டு வாங்கிக் கொள்வார்கள்.உதாரணமாக 1 சவரன் 40 ஆயிரம் கொடுத்து வாங்கி இருப்போம் என்றால் அதற்கு சேதாரமாக 4 ஆயிரம் வசூலிப்பார்கள் .

செய்கூலி என்பது ஒரு நகையை செய்ய பொற்கொல்லர் வாங்கும் சம்பளம் ஆகும் இவை இடத்திற்கு இடம் நகையின் அளவு மற்றும் வேலைப்பாடுகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil