கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்? Pambu Kanavil Vanthal Enna Nadakum?

Pambu Kanavil Vanthal

பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம்? Kanavil Pambu Vanthal Enna Palan in Tamil..!

Pambu Kanavil Vanthal:- பொதுவாக நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்பொழுது பலவகையான கனவுகள் வரும் அந்த வகையில் நம் கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்?  என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் இருக்கும் நாம் கனவில் பாம்பு வந்தாலே அது நமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அர்த்தமாகும்.

வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா.?

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? Pambu Kanavil Vanthal Enna Artham..!

1 ஒற்றை நல்ல பாம்பு தங்கள் கனவில் வந்தால் அது தங்களுடைய விரோதிகளால் பல பிரச்சனைகளும்,  தொல்லைகளும் ஏற்படும் என்பதற்கான அர்த்தமாகும்.

2 தங்களுடைய கனவில் இரட்டைப் பாம்புகள் வந்தால் தங்களுக்கு ஏதேனும்  நன்மை நிகழப்போகிறது என்று அர்த்தமாகும்.

3 தங்களுடைய கனவில் பாம்பை கொல்லுவது போல் அல்லது தாங்கள் கனவில் பாம்பை கொன்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றால் தங்கள் விரோதிகளால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

4 தங்களை பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் தங்களுக்கு கூடிய விரைவில் ஏதேனும் தனலாபம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.

5 உங்கள் கனவில் பாம்பு விரட்டுவது போல் கனவு வந்தால் வறுமை உண்டாகும்.

கனவில் பணம் கண்டால் என்ன பலன்?

6 தங்கள் கால்களை சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போன்று கனவு வந்தால் தங்களுக்கு சனி பிடிக்கப் போவதற்கான அர்த்தமாகும்.

7 அதேபோல் தங்களை பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் தங்களை பிடித்த சனி நீங்கப்போவதற்கான அர்த்தமாகும்.

8 கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதுபோல் கனவு வந்தால் நீங்கள் லட்சாதீபதி ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

9 ஒரு சிலருக்கு அவர்களுடைய கனவில் அடிக்கடி பாம்பு வந்துகொண்டே இருக்கும். காரணம் அவர்களுக்கு ராகு கேது தோஷம் அல்லது ராகு திசை, கேது திசை, ராகுபுத்தி, கேது திசை நேரமாக இருக்கலாம். எனவே அவர்கள் ராகு கேது பரிகாரம் செய்யவேண்டும் என்பதற்கான அர்த்தமாகும்.

10 தங்கள் மனதிற்கு அதிக கஷ்டத்தை கொடுக்கும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்தால் அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருக்காமல் ஏதேனும் தங்களுக்கு பிடித்த கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு வந்தால் மனக்கஷ்டம் நீங்கும், மன அமைதி கிடைக்கும்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்