உங்களின் பான் கார்டு Safe ஆக இருக்கிறதா..? இல்லையா..? என்பதை கண்டறிவது எப்படி தெரியுமா..?

Advertisement

Pan Card Misuse Check 

பொதுவாக மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் இதுபோன்ற அனைத்து ஆவணங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் ஒருவர் கூட இதில் எல்லாம் சின்ன பிழைகள் கூட இல்லாமல் வைத்து இருப்பது இல்லை. இத்தகைய ஆவணங்களில் ஏதாவது ஒன்றிலாவது பிழைகளுடன் தான் வைத்து இருக்கிறார்கள். பிழைகளை சரியாக கவனிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் சிலருக்கு அவர்கள் உபயோகப்படுத்தும் பான் கார்டு எந்த விதமான மோசடியும் இல்லாமல் இருக்கிறதா என்பதே தெரியாமல் இருக்கிறது. ஏனென்றால் பான் கார்டு என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக கருதுபடுகிறது. ஆதலால் அதில் மோசடி ஏதும் நிகழாதவறு நாம் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பான் கார்டு மோசடியை கண்டறிவது எப்படி:

பான் கார்டு என்பது ஒருவருடைய வருடாந்திர வருமானம் முதல் இதர அனைத்தையும் கணக்கிடுவதற்கு உபயோகமுள்ள ஒன்றாக இருக்கிறது. இதனால் தான் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பினை முக்கியமாக்கி உள்ளது.

இதனை போலவே நாம் அனைவருக்கும் ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளை உபயோகப்படுத்துவது கூடாது என்றும், ஒருவேளை அப்படி உபயோகப்படுத்தினால் 10,000 ரூபாய் அபராதம் என்பதும் தெரிந்த ஒன்று. ஆனால் இத்தனை அம்சங்களை கொண்டுள்ள பான் கார்டு மோசடியில் இருக்கிறதா..? இல்லையா..? நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. 

அதனை கண்டறிவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை:

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் படிவம் 26AS என்பதற்கு சென்று அதில் உங்களுடைய வருமான வரி தாக்குதலில் வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை தீர்மானம் செய்து கொள்ளுதல் அவசியம்.

சிபில் ஸ்கோர்:

பான் கார்டினை பயன்படுத்தில் உங்களுடைய சிபில் மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும். அதாவது சிபில் மதிப்பெண்ணில் வேறு ஏதேனும் தேவை இல்லாத கிரெடிட் கார்டு படிவங்கள் உங்களுக்கு தெரியாமல் இடம் பெற்றிருக்கிறதா என்பதை கண்காணித்தல் வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் மோசடி இருப்பது தெரிய வந்தால் முதலில் உங்களின் வங்கிக்கு தெரியப்படுத்தி கணக்கினை சரிபார்க்க சொல்ல வேண்டும்.

ஒருவேளை மோசடி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் ஏதும் உங்களிடம் இருந்தாலோ அல்லது சந்தேகப்பட்டாலோ அதனை வருமான வரித்துறையிடம் மற்றும் காவல் துறையிடம் முறைப்படி புகார் அளித்து விசாரணையை தொடங்க வேண்டும்.

வெறும் 2 நிமிடத்தில் ஆன்லைனில் பான் கார்டு திருத்தம் செய்யலாம் 

How to Apply for Pan Card Misuse Online:

ஸ்டேப்- 1

முதலில் TIN NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பின்பு அதில்  Customer Care என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Complaints/Queries என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

அதன் பிறகு உங்களுக்கான புகார் படிவம் வந்து விடும். அதில் உங்களுடைய தகவல்களை பூர்த்தி செய்து Submit கொடுக்க வேண்டும்.

இதுவே பான் தவறுதலாக பயன்படுத்தியத்திற்கு ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆதாருடன் பான் கார்டு லிங்க் செய்யப்பட்டதா  இல்லையா என்பதை அறிவது எப்படி 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement