பணம் பத்தும் செய்யும்
வாசகர்களுக்கு வணக்கம்..! இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பொருள் என்றால் அது பணம் மட்டும் தான். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்வார்கள். அவ்வளவு ஏன் நம் அனைவரிடமும் பணம் என்பது கட்டாயம் இருக்கும். ஆனால் அது குறைவாக அல்லது அதிகமாக இருப்பது என்பது அவர்களின் மதிப்பை பொறுத்து இருக்கிறது. நாம் அனைவருமே உணவும் நீரும் இல்லை என்றால் உயிர் வாழவே முடியாது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அந்த நீரையும் உணவையும் கூட இன்று காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். சிலர் சொல்வார்கள் பணம் பத்தும் செய்யும் என்று, அதே நேரம் பணம் இல்லாதவனை வச்சி செய்யும் என்று படத்தில் சொல்லி கேட்டிருப்போம். அப்படி பணம் பத்தும் செய்யும் என்று சொல்லும் அந்த பத்து என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க அதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பணம் பத்தும் செய்யும் என்பது என்ன..?
பணம் பத்தும் செய்யும் என்பதில் வரும் பத்து என்ற சொல்லானது எண்ணில் அடங்காத என்ற பொருள் தருகிறது.
அதனால் பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒருவனிடம் பணம் தேவைக்கு அதிகமாக வந்துவிட்டால் இந்த பத்துவித குணங்களும் அவனிடம் ஒட்டிக்கொள்ளும். அது என்ன குணங்கள் என்று இப்போது பார்ப்போம்.
- காம
- குரோத
- லோப
- மோஹ
- மத
- மச்சர
- டம்ப
- தர்ப்ப
- ஈர்ஷை
- அசூயை
பணவீக்கம் Vs பணவாட்டம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னென்ன
பத்துவித குணங்களும் பொருளும் | |
காம – என்பது | ஆசை, ப்ரீதி, தனம், தான்யம், புத்திரம், மனைவி, மக்கள், பௌத்திராதிகளின் பேரில் அதிக அன்பு வைத்து துயரமடைந்தவர் நரகாசுரன் போன்றவராவர். |
குரோத – என்பது | ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் ஒருவருக்கு நல்லவராக இருந்தாலும், அவருக்கு கெடுதல் விளைவிக்க முயற்சி செய்தால் அதை குரோதம் என்பர். அப்படி இருப்பவரை பரகாசுரன் என்று சொல்வர். |
லோப – என்பது | தன்னிடம் சொத்துக்கள் அதிகமாக இருந்தும், அதை நண்பர்கள், உறவினர்கள் அல்லது கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்க கூடாது என்ற எண்ணம் இருந்தால் அதை கஞ்சத்தனம் என்று சொல்வர். இப்படி இருப்பவரை துரியோதனன் என்று சொல்வர். |
மோஹ – என்பது | தன் ஆசையால் காதல், திருமணம் என்று செய்து குழந்தைகளும் பிறந்ததும், தன்னிடம் இருக்கும் செல்வங்கள் போதாது என்று மேலும் சம்பாதிக்க ஆசைப்பட்டு துயரம் அடைவர். இப்படி புத்திர சோகத்தால் துயரம் அடைந்தவரை தசரத மகாராஜா என்று சொல்வர். |
மத – என்பது | பணம் அதிகமாக சேர்த்து விட்டதால் மற்றவர்களை மதிக்காமல், அலட்சியமாகவும் அகம்பாவமாகவும் பேசுபவரை கார்த்தவீரியாச்சுணன் என்று சொல்வர். |
மச்சர – என்பது | தனக்கு கிடைத்த செல்வமும் பொருளும் மற்றவர்களுக்கும் கிடைத்து விட்டதே என்று பொறாமையால் அவர்களுக்கு தீங்கு நினைக்கும் குணம் கொண்டவர்களை சிசுபாலதந்தவககிரன் என்று சொல்வார்கள். |
டம்ப – என்பது | டம்ப என்பதை ஆடம்பரம் என்று சொல்வர். அதாவது ஒருவர் தனக்கு விருப்பம் இல்லையென்றாலும், தற்பெருமைக்காக தர்மம், ஹோமம், யாகம் போன்ற செயல்கள் செய்பவரை புரூர சக்கரவர்த்தி என்று சொல்வர். |
தர்ப்ப – என்பது | இந்த உலகத்தில் தன்னை போல் யாருமே கிடையாது, நான் தான் அனைத்திலும் சிறந்தவன் என்று கர்வம் அடைவதை கர்வம் – அகங்காரம் என்று சொல்வர். இப்படி ஒரு குணம் கொண்டவர்களை பரசுராமன் என்று சொல்வர். |
ஈர்ஷை – என்பது | தனக்கு வந்த கஷ்டமும் துயரங்களும் மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை அருனாஷதன் என்று சொல்வர். |
அசூயை – என்பது | ஒருவர் தனக்கு செய்த கெடுதலை அவருக்கே திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களை பவுண்ரீக வாசுதேவன் என்று சொல்வர். |
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |