வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கணையம் பற்றி யாருக்கும் தெரியாத சில குறிப்புகள்..!

Updated On: July 11, 2023 8:11 AM
Follow Us:
Pancreas in Tamil
---Advertisement---
Advertisement

Pancreas in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலினை அறிந்து கொண்டிருக்கின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தகவல் என்று தானே அனைவரும் இப்பொழுது சிந்தனை செய்கிறீர்கள். பொதுவாக நாம் மனிதனாக நன்கு இயங்குவதற்கு நமக்கு உதவிபுரிவது நமது உடல் உறுப்புகள் தான். அப்படிப்பட்ட நமது உடல் உறுப்புக்கள் பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலருக்கும் அதற்கான பதில் இருக்காது. ஏனென்றால் நம்மில் பலருக்கும் நமது உடல் உறுப்புக்கள் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் இன்றைய பதிவின் வாயிலாக நமது உடல் உறுப்புகளில் ஒன்றான கணையத்தை பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து கணையம் என்னென்ன வேலைகள் செய்கின்றது இதனால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றது போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கணையம் பற்றிய தகவல்:

Pancreas function in tamil

கணையம் என்பது மனிதர்களின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே உள்ள ஓர் உறுப்பு ஆகும். இது கேரட் அல்லது முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு.

கணையம் செய்யும் வேலைகள்:

பொதுவாக இந்த கணையமானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது. மேலும் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன.

அதேபோல் இன்சுலின், குளூக்கொகான் (Glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றன.

கணையத்தில் புற்றுநோய் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்

மேலும் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஓர் அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஓர் அங்கமாகவும் இயங்குகின்றது.

பொதுவாக கணையம் சுரப்பிநீரைச் செலுத்தும் நொதியங்களைக் கொண்ட குழாய்களில் உள்ள நொதியங்கள் கார்போஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பியம் (Lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம்) போன்றவற்றை பிரிக்க உதவுகின்றன.

கணையத்தின் வேறுபெயர்கள்:

இது தமிழ் மொழியில் கணையம் அல்லது சதையி அல்லது சதையம் என்றும், ஆங்கிலத்தில் Pancreas என்றும், தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது.

கணையத்தில் ஏற்படும் தொற்றுகள்:

பொதுவாக கணையம் சரியாகச் செயல்படாதபோது, ​​பல கணைய பிரச்சினைகள் ஏற்பட வாய்புள்ளது. அதாவது கணைய அழற்சி, கணைய புற்றுநோய், கணைய நீர்க்கட்டிகள், எக்ஸோகிரைன் கணைய பற்றாக்குறை, கணைய திரவ சேகரிப்பு மற்றும் பல நோய்கள் ஏற்படும்.

கணையத்தில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் வழிகள்:

பொதுவாக கணையத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு நமது கணையம் நன்கு ஆரோக்கியத்துடன் இயங்க வேண்டும். அதற்கு தேவையானவற்றை நாம் செய்ய வேண்டும். அதாவது கணையம் ஆரோக்கியத்துடன் இயங்குவதற்கு உதவும் சில உணவுகளை பார்ப்போம்.

அதாவது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பூண்டு, சிவப்பு திராட்சை, பெர்ரி வகையை சேர்ந்த பழங்கள், ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் மற்றும் தயிர் ஆகியவை கணையம் ஆரோக்கியத்துடன் இயங்குவதற்கு உதவும் சில உணவுகள் ஆகும்.

கணையத்தை பாதுகாக்க உதவும் உணவுகள் என்ன

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now