வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பங்குனி உத்திரம் 2025-ல் எப்போது? அதற்கான நேரம்

Updated On: April 3, 2025 2:29 PM
Follow Us:
panguni uthiram 2025 date in tamil
---Advertisement---
Advertisement

Panguni Uthiram 2025 Date And Time in Tamil | | Panguni Uthiram 2025 date in Tamil Calendar | பங்குனி உத்திரம் 2025 ஆங்கில தேதி 

தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல நாட்கள் இருக்கிறது. அதாவது செவ்வாய், சஷ்டி, கார்த்திகை போன்ற நாட்கள் முருகனுக்கு உகந்த நாட்களாக இருக்கிறது. இந்த வகையில் பங்குனி உத்திரமும் முருக பெருமானுக்கு உரியதாக இருக்கிறது. இந்த நாள் ரொம்ப முக்கியமான நாளாக இருக்கிறது. அதாவது காதல், திருமணம், தெய்வீக தன்மையை குறிக்கிறது. நட்சத்திரங்கள் பல இருந்தாலும் உத்திரம் நட்சத்திரம் முருகனுக்கு உரியதாக இருக்கிறது. அது போல தமிழ் மாதங்களில் வரும் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டப்படுவது தான் பங்கு உத்திரம். இந்த நாள் என்னைக்கு வருது, அதற்கான நேரத்தை பலரும் தேடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் பங்குனி உத்திரம் தேதி மற்றும் நேரத்தை பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பங்குனி உத்திரம் தேதி | பங்குனி உத்திரம் காலண்டர் தேதி 

பங்குனி உத்திரம் காலண்டர் தேதி 

பங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது முருகன் தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். எல்லா மாதத்திலும் உத்திரம் நட்சத்திரம் இடம்பெறும். ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திக்கு தனி சிறப்பு இருக்கிறது. இந்த நாளன்று முருக பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றி கொள்வார்கள்.

 பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் 2025-ல் ஏப்ரல் 10-ம் தேதி பிற்பகல் பிற்பகல் 12:24 மணிக்கு ஆரம்பித்து மறுநாள்  ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 3:10 மணிக்கு முடிவடைகிறது. 

பங்குனி உத்திரம் புராண கதைகள்:

முருகன் தன் தந்தை சிவபெருமானின் அறிவுரைப்படி தெய்வானையை மணம் முடித்துக் கொண்டார். இந்தத் திருமணம் ஆனது பங்குனி உத்திரம் நாளில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.

இராமாயண காவியத்தில்  ராமர் மற்றும் சீதா தேவியின் திருமணமும் இந்த நாளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

பார்வதியை மணம் முடித்த சிவபெருமானின் திருக்கல்யாணமும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது என நம்பப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now