பணி ஓய்வு வாழ்த்து மடல்
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு வேலை செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேலைகளை பார்க்கிறார்கள். அதாவது அரசு வேலைகள், தனியார் வேலைகள் என இரு வகைகள் இருக்கிறது. எந்த வகை வேலை பார்த்தாலும் அதற்கு பணி ஓய்வு என்பது இருக்கும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு பாராட்டு விழா நடக்கும். அப்படி நடக்கும் போது அவர்களுக்கு நிறைய வகையான பரிசுகள் வழங்குவார்கள். சில பேர் வாழ்த்து மடல் எழுதி கொடுப்பார்கள். இந்த பதிவில் பணி ஓய்வு வாழ்த்து மடலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Pani Oivu Valthu Madal:
என்னுடன் பணியாற்றிய எங்களில் ஒருவர்
எழுத்தும் இசையும் (ஊழியர்) மனங்களில் விதைத்தவர்
இன்று எம்மைப் பிரிந்திட நேரும் – உன்
பணி நிறைவாலே வந்தது இந்நேரம்.
பணிகள் செய்ய நீ சளைத்தாய் இல்லை
இன்னமும் நீ களைத்தாய் இல்லை
பாரில் இசை வளர்த்தோர் உண்டு – நீ எம்
அலுவலகத்தில் இசை வளர்த்த அம்மை – இது மெய்
வள்ளுவனும் பாரதியும் சொன்ன சொல்லை
உன் போல் செய்ய எவரும் இல்லை
அலுவலகத்தில் ஆற்றும் பணிகள் செய்யப்
பயின்றோம் நாங்கள் உன்னைப் பார்த்து.
கடலின் ஆழம் அமைதியைப் போல – உன்
கருத்தின் ஆழம், அமைதியாய் இருப்பாய்
மௌனமாய் இருந்து பணிகள் செய்வாய்
புன்னகையால் எம்மைப் புரிய வைப்பாய்.
வாய் திறந்தாலோ சிரிப்பு வெள்ளம்
மகிழ்வுடன் நிறையும் கேட்பவர் உள்ளம்
இசைக்கு நீ சிறப்பு செய்தாய் அந்தத்
இசையாலே நீ சிறப்பும் பெற்றாய்.
ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்தாலும்
முணுமுணுப்புடன் பணி செய்பவர் உண்டு
நாற்பது ஆண்டுகள் முடித்த பின்னாலும்
முகந்தனில் மலர்ச்சி மறையவில்லை.
தந்தையைப் பிரிந்தால் அது கரு!
தாயைப் பிரிந்தால் அது குழவி!
வயலைப் பிரிந்தால் அது நெல்,
உதட்டைப் பிரிந்தால் அது சொல்!
இரவைப் பிரிந்த பொழுதுதான் காலை,
செடியைப் பிரிந்த மலர்தான் மாலை!
மலையைப் பிரிந்த கல்தான் சிலை,
செடியைப் பிரிந்தால்தான் காய்க்கு விலை!
இமைகள் பிரிந்தால்தான் பார்வை,
உழைத்துக் களைத்தால்தான் வேர்வை!
கூட்டைப் பிரிந்தால்தான் பறவை,
நாங்கள் வேண்டுவதோ உங்கள் உறவை!
விண்ணைப் பிரிந்தால் மழைத்தண்ணீர்,
உங்களைப் பிரியும் எம் கண்ணில் கண்ணீர்!
நாம் பிறந்தது வேறுவேறு தாய்க்கு,
ஆயினும் பிள்ளைகள் இந்த ஒரே (இலாக்கா) தாய்க்கு!
உன்னில் சிறியவர் நாங்கள் எனினும்
வாழ்த்துகிறோம் உன்னை நன்னலம் பெறவே
ஆண்டவன் திருவருளாலே
மண்ணில் மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு.
நாங்கள் கேட்பது உங்கள் ஆசீர்வாதம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |