Panna Fish
நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் அனைவருக்கும் எது பிடிக்குமோ இல்லையோ, ஆனால் மீன் என்பது கட்டாயமாக பிடித்த ஒன்றாக தான் இருக்கும். அதேபோல் நம்மில் சிலருக்கு வறுவல் செய்த மீன் தான் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் இத்தகைய மீன்களில் பல வகைகள் இருக்கிறது. அதாவது சுறா மீன், கெண்டை மீன், சிலேப்பி மீன், கெழுத்தி மீன், கொரவ மீன் என இன்னும் எண்ணற்ற வகைகள் உள்ளது. இத்தகைய மீன்களின் வரிசையில் பன்னா மீனும் ஒன்றாக உள்ளது. ஆனால் நிறைய பேருக்கு பன்னா மீன் பற்றிய முழு தகவல்கள் என்பது சரியாக தெரிவது இல்லை. எனவே இன்றைய பதிவில் பன்னா மீன் பற்றிய முழு தகவலை தான் பார்க்கப்போகிறோம்.
பன்னா மீன் பற்றிய தகவல்:
பன்னா மீன் ஆனது சியானிடே என்ற குடும்பத்தை சார்ந்த ஒரு மீன் வகையாக உள்ளது. ஆனால் இக்தியாலஜிஸ்ட் ஆர்.எஸ்.லால் மோகன் என்பவர் 1969 ஆம் ஆண்டு இத்தகைய மீன் ஆனது மோனோஸ்பெசிஃபிக் இனமாக காணப்படுகிறது என்பதை ஆய்வின் படி கூறினார்.
மேலும் இத்தகைய பன்னா மீன்களிலே பன்னா பேர்மடஸ், பன்னா ஹெட்டரோலெபிஸ் மற்றும் பன்னா மைக்ரோடான் என்ற மூன்று வகையான இனங்கள் உள்ளது.
இந்த மீனின் சிறப்பாக நீச்சல் சிறுநீர்ப்பையைக் காணப்படுகிறது. அதேபோல் இந்த மீன் தலையின் முனையில் தொடங்கி அதன் வேரில் ஒரு எளிய பின்பகுதியாக 1 ஜோடி இணைப்புகளை கொண்டுள்ளது.
பன்னா மீன் ஆனது தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவை தாய்நாடாக கொண்டது ஆகும். ஆனால் தற்போது இலங்கை, பங்களாதேஷ், இந்தோ- மேற்கு பசிபிக் பகுதி மற்றும் இந்தியா என இத்தகைய நாடுகளிலும் இருக்கிறது.
அதேபோல் பன்னா மீன்களின் இனம் ஆனது பெரும்பாலும் அழிந்து கொண்டே போகும் நிலையில் தான் தற்போது இருக்கிறது.
கடல் ஊசி மீனை சாப்பிடுவதற்கு முன்பாக இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |