பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்? | Paravai Kanavu Palangal

Advertisement

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்? | Paravai Kanavu Palangal | Birds Dream Meaning 

Paravai Kanavu Palangal:– இந்த உலகத்தில் பலவகையான பறவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்றும் நமக்கு தெரிந்திருக்கும். இந்த பறவைகள் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் இப்பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கனவுகள் என்றாலே நமக்கு நடக்க இருக்கும் நல்லது மற்றும் கெட்ட விசயங்களை நமக்கு முன்கூட்டியே உணர்த்துகின்றது என்று பொருள். அந்த வகையில் பறவைகள் பொதுவாக நம் கனவில் வந்தால் பலவகையான நன்மைகள் நடைபெறும் என்று அர்த்தமாகும். சரி இப்பதிவில் கனவில் பறவைகள் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம்.

பறவை கனவில் வந்தால் என்ன பலன் | Paravaigal Kanavu Palangal

சேவல் கனவில் வந்தால் என்ன பலன்:

  • சேவல் கூவுவது போல் கனவு கண்டால் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகின்றது என்று அர்த்தமாகும்.
  • சேவல் மற்றும் கோழியை கனவில் ஒன்றாக கண்டால் ஏதோ நல்ல காரியம் நடைபெறப்போகின்றது என்று அர்த்தம்.

வான்கோழி கனவில் வந்தால் என்ன பலன்?

நம் கனவில் வான்கோழி வந்தால் அது நமக்கு நல்லதல்ல அதாவது குடும்பத்தில் கெட்ட காரியங்கள் நடைபெறப்போகின்றது என்பதற்கான அர்த்தமாகும்.

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்? | Paravai Kanavu Palangal

  • சாதாரணமாக பறவைகள் நம் கனவில் வந்தால் நாம் இருக்கும் இடத்தின் சூழ்நிலை மாறப்போகின்றது என்பதற்கான அறிகுறியாகும்.
  • பறவைகளுக்கு தானியங்கள் தூவுவது போல் கனவு கண்டால் தங்கள் காதலில் வெற்றியடைய போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
  • அதேபோல் பறவையை கையில் தூக்கி செல்வது போல் கனவு வந்தால் தேர்வில் வெற்றி என்று அர்த்தம்.
  • பாடும் பறவையை தங்கள் கனவில் கண்டால் கூடிய சீக்கிரம் சுபகாரியங்கள் நடைபெறப்போகின்றது என்று அர்த்தம்.

வாத்து கனவில் வந்தால் என்ன பலன்?

தங்கள் கனவில் வாத்து வந்தால் நீங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.

அன்னப்பறவை கனவில் வந்தால் என்ன பலன்?

அன்னப்பறவையை கனவில் கண்டால் தங்களுக்கு தெய்வங்களின் அருள் கிடைக்க போகின்றது என்று அர்த்தமாகும்.

கிளியை கனவில் கண்டால் என்ன பலன்?

  • கிளி கனவில் வந்தால் தங்கள் தொழில் விருத்தி அடையும் என்று பொருள்.
  • கிளிகள் கூட்டமாக தானியங்கள் உண்பது போல் கனவு கண்டால் நமக்கு பொருள் சேதம் ஏற்படும் என்று அர்த்தமாகும்.
  • அதுவே கிளி இறப்பது போல் கனவு கண்டால் நமக்கு கடன் அதிகரிக்கும் என்று பொருள்.

தூக்கணாங்குருவி கனவில் வந்தால் என்ன நடக்கும்?

தூக்கணாங்குருவி நம் கனவில் கண்டால் அது நல்ல சகுனமாகும். அதாவது தாங்கள் செய்ய இருக்கும் நல்ல காரியம் நல்லதில் முடியும்.

பருந்து கனவில் வந்தால் என்ன பலன்?

பருந்து அல்லது கழுகை கனவில் காண்பது நல்லதல்ல. ஆகவே எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அவற்றில் தெளிவாக செயல்படுங்கள்.

கழுகு கனவில் வந்தால் என்ன பலன்?

கழுகு பிணத்தை கொத்தி திணைப்பது போல் கனவு கண்டால் அது கனவு காண்பவருக்கு வியாதிகள் வரப்போவதையும், அந்த வியாதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

வௌவால் கனவில் வந்தால் என்ன பலன்?

  • தங்கள் கனவில் வௌவாலை கூட்டமாகவோ அல்லது தனியாகவோ காண்பது மிகவும் நல்லது.
  • அதுவே வௌவால் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் அது தங்களுக்கு கெட்ட செய்து வரவிருப்பதை தங்களுக்கு உணர்த்தும் அறிகுறியாகும்.
  • அதேபோல் நம் வீட்டிலிருந்து வௌவால் வெளியே பறந்து செல்வது போல் கனவு கண்டால் அது தங்களுடைய வறுமைகள் அனைத்தும் நீங்கப்போகின்றது என்பதற்கான அறிகுறியாகும்.
All Kanavu Palangal in Tamil

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement