Passion Fruit in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருப்பவர்கள் அநேக பேர்கள் உள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பலவகையான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் அவையாவும் முழுமையை அடைந்துள்ளதா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். உதாரணத்திற்கு நாம் அனைவரும் சாப்பிடும் உணவு பொருட்களை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரிந்திருக்காது. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் பேஷன் பழத்தின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Passion Fruit Details in Tamil:
இந்த பேஷன் பழம் என்பது பாசிஃப்ளோரா இனத்தைச் சேர்ந்த பழம் ஆகும். மேலும் இது தாட்பூட்டின் கொடி இனப் பழம் ஆகும். இந்த பேஷன் பழமானது வட்டமான அல்லது ஓவல் வடிவில் உள்ளது.
அதாவது இந்த பழங்கள் 1.5 முதல் 3 அங்குல அகலம் (3.81 முதல் 7.62 சென்டிமீட்டர்) வரை இருக்கும். மேலும் இவை மஞ்சள், சிவப்பு, ஊதா மற்றும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
இவை பொதுவாக வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படுகிறது. அதாவது இந்த பழமானது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வியட்நாம், இசுரேல், ஆத்திரேலியா, தென் கொரியா, ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் வளர்கிறது.
உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி
வகைகள்:
பேஷன் பழத்தில்,
- ஊதா பேஷன் பழம் (Fruits of Passiflora Edulis Sims)
- மஞ்சள் பேஷன் பழம் ( Passiflora Edulis f. flavicarpa Deg)
- இனிப்பு கிரானடில்லா (Passiflora ligularis)
- ராட்சத கிரானடில்லா (Passiflora quadrangularis L.) என நான்கு வகைகள் உள்ளது.
பிறப்பிடம்:
இந்த பேஷன் பழமானது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது ஆகும்.
வேறுபெயர்கள்:
இந்து கொடித்தோடை அல்லது தாட்பூட்பழம் என தமிழ் மொழியிலும், பேஷன் பழம் (Passion Fruit) என ஆங்கில மொழியிலும், பாசிஃப்ளோரா எடுலிஸ் (Passiflora edulis) என்ற அறிவியல் பெயராலும் அழைக்கப்படுகிறது.
பாதாமை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சு வைச்சிக்கணும்
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் பேஷன் பழத்தில்,
- நீர் – 73%
- கார்போஹைட்ரேட் – 23%
- புரதம் – 2%
- கொழுப்பு – 1%
- கலோரி – 97
- வைட்டமின் சி – தினசரி மதிப்பில் 36%
- ரிபோஃப்ளேவின் – 11%
- நியாசின் – 10%
- இரும்புசத்து – 12%
- பாஸ்பரஸ் – 10%
பயன்கள்:
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கின்றது. அதாவது இந்த பேஷன் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையை அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து உதவுகிறது.
புற்றுநோய்யை தடுக்க பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது.
சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுத்த உதவுகின்றது.
Peppermint பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |