தித்திக்கும் தீபாவளிக்கு பாதுகாப்பான கொண்டாட பசுமை பட்டாசுகள்..

Advertisement

தீபாவளியும் பட்டாசும் 

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் மட்டும் தான் உள்ளது. தித்திக்கும் தீபாவளியை கொண்டாட புது ஆடைகள் இனிப்புகள் பட்டாசுகள் என நாம் ஒரு மாதத்திற்கு முன் இருந்தே வாங்க தொடங்கி இருப்போம். ஆடைகள் வாங்கும் போதும் இனிப்பு வகைகள் வாங்கும் போதும் அதன் தரம் பார்த்து வாங்கும் நாம். பட்டாசு என்று வரும் போது அதற்கான தரத்தை பார்த்து வாங்குகிறோமா ? கண்டிப்பாக இல்லை பட்டாசுகள் நமக்கும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தும் வாங்குகின்றோம். பட்டாசு வாங்குவதை நிறுத்த முடியாது அது நமது பாரம்பரியத்தில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் ஆபத்தில்லாத பட்டாசுகளை நம்மால் வாங்க முடியும். சந்தையில் பலவகையான பட்டாசுகள் உள்ளன. சீன பட்டாசு, பசுமை பட்டாசு, நாட்டு பட்டாசு என இவற்றில் உள்ள ஆபத்துகள் என்ன ? இவற்றில் எது சிறந்தது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பட்டாசு நமது பாரம்பரியமாக இருந்தாலும் சுற்றுசூழலுக்கு நமக்கும் ஆபத்தில்லாத பட்டாசை பயன்படுத்தி தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாத இருக்கும்.

படபடக்கும் பட்டாசு:

தீபாவளியை வண்ணங்கள் நிறைந்ததாக மாற்றுவது பட்டாசுகள். கடந்த சில வருடங்களாக காற்றில் ஏற்படும் அதிகப்படியான மாசு காரணமாக தீபாவளிக்கு பட்டாசை பயன்படுத்துவதற்கு அரசு காலக்கெடு விதித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடம் காலை 1 மணி நேரம் மற்றும் இரவு 1 மணி நேரம் என 2 மணி நேரங்கள் மட்டுமே வழங்க படுகிறது.

கடந்த வருடமும் இதே காலகெடு விதித்திருந்தாலும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் காற்றின் மாசுபாட்டின் அளவு  545 AQI பதிவாகியுள்ளது. ஆரோக்கியமான காற்றின் தரம் 0 AQI முதல் 5 AQI வரை இருக்க வேண்டும்.

பசுமை பட்டாசு: 

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் மற்றும் பாரம்பரிய பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும். இவை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் இயங்கும் NEERI-யால் உருவாக்கப்பட்டது. பசுமை பட்டாசு வெடிக்கும்போது ஒலி அளவு பாரம்பரிய பட்டாசை விட குறைவாகவே இருப்பதால் ஒலியைமாசுபாட்டை குறைக்கிறது.

பசுமை பட்டாசு logo:

 

பசுமை பட்டாசு

 

பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். ஆனால் வெடிக்கும்போது எழுப்பும் ஒலி மற்றும் காற்று மாசு குறைவாக இருக்கும்.

பாரம்பரிய பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகள் அதிகபட்சம் 70% காற்று மாசுபாட்டை குறைக்கும்.

பாரம்பரிய பட்டாசுகளின் உற்பத்தி செலவை விட பசுமை பட்டாசு உற்பத்திக்கு செலவுகள் குறைவு.

Celebrate Diwali with green crackers

பசுமை பட்டாசுகள் 3 பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

  1. பாதுகாப்பான நீர் வெளியீடு (SWAS),
  2. பாதுகாப்பான தெர்மைட் பட்டாசு (STAR),
  3. பாதுகாப்பான குறைந்தபட்ச அலுமினியம் (SAFAL).

பேரியம் நைட்ரேட் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருளாகும் இதனை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரித்தல் மட்டுமே பட்டாசுகளில் இருந்து பச்சை நிற வண்ணம் வெளிப்படும்.

பச்சை நேரம் வெளிப்பட்டால் மட்டுமே பசுமை பட்டாசு என்று மக்களிடம் பொதுவான கருத்து உள்ளது. அது முற்றிலும் தவறானது. பசுமை பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்னும் முத்திரைகள் காணப்படும்.

பசுமை பட்டாசுகள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவித்தாலும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும்போதும் வெளிப்படும் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், பாதரசம் போன்ற வேதி வாயுக்கள் உடல் நல குறைபாட்டை ஏற்படுத்தும்.

நாட்டு பட்டாசு:

நாட்டு பட்டாசு

பசுமை பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டு பட்டாசு 30% அதிகமான மாசை வெளிப்படுத்துகிறது. நாட்டு பட்டாசுகளில் அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்த படுகிறது. அரசு நிர்ணயித்த 126 டெசிபெலுக்கு அதிகமாக ஒலியை ஏற்படுத்தும்.

பசுமை பட்டாசுகளை விட 10 முதல் 20% குறைவான விலையில் நாட்டு பட்டாசுகள் கிடைக்கும்.

சீன பட்டாசுகள்:

china pattasu

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சீன பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீன பட்டாசுகள் உயிர் சேதங்களை அதிக அளவில் ஏற்படுத்த கூடியதாக உள்ளது.

சீன பட்டாசுகள் வெடிக்கும் போது வெளியாகும் ஒளி மிக அழகானதாக காணப்படும். ஆனால் சீன பட்டாசில் பயன்படுத்தப்படும் சில்வர் பல்மனெட் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடியது. சில்வர் பல்மனெட் தடை செய்யப்பட்ட வேதிப்பொருளாகும்.

சில்வர் பல்மனெட் சிறிய அழுத்தங்கள் ஏற்பட்டாலும் வெடிக்க கூடியது. இவ்வாற்றில் இருந்து ஏற்படும் புகை உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தும்.

இந்த வருடம் சுற்றுசூழலுக்கு நமக்கும் தீங்கு இல்லாமல் பசுமை பட்டாசுகளை அரசு நிர்ணயித்த நேரத்தில் பயன்படுத்தி சுற்றுசூழலை பாதுகாப்போம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement