பத்திரம் பெயர் மாற்றம் செய்வது எப்படி.?
இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போனாலும் சொத்திற்கு ஆதாரமாக இருப்பது பத்திரம் தான். மனிதர்களின் வாழ்க்கையில் சொத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பத்திரத்தில் உள்ள பெயர் தான் அந்த சொத்திற்கு யார் உரிமையாளர் என்பதை குறிக்கிறது. பத்திரத்தை பட்டாவாக மாற்றுவது, பட்டாவில் உள்ள பிழைகளை திருத்துவது போன்றுவதற்கு Online வசதி வந்தாலும் அலுவலகத்திற்கு செல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்வது எப்படி.?
பத்திரத்தில் உள்ள பெயரை மாற்றம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
பெயர் மாற்றம் எந்த முறையில் மாற்றம் செய்ய போகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.
சொத்திற்கு யார் உரிமையாளரா இருக்கிறாரோ அவர் நேரில் வர வேண்டும்.
சொத்தின் உரிமையாளர் பெயரில் பட்டா மற்றும் பத்திரம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சொத்தின் உரிமையாளர் நிலப் பதிவேடு அலுவலகத்திற்குச் சென்று, பெயரளவிலான கட்டணத்துடன் தனது புதிய பெயரைப் பற்றிய சுய-சான்றளிக்கப்பட்ட சான்றுகளை அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.
அனைத்து சான்றுகளையும் சரிபார்த்த பிறகு, நிலப் பதிவேடு அலுவலகத்தின் உரிமை துறையானது, பத்திரத்தில் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து விசாரணையை தொடங்குகிறது. இந்த பெயர் மாற்றத்தின் பெயரில் எந்த விதமான மோசடி நடவடிக்கையும் தொடரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சட்டப்பூர்வ பெயர் மாற்றத்தின் சரிபார்த்த பிறகு, பத்திர பதிவுகளிலும் பெயர் புதுப்பிக்கப்படும். பத்திரத்தில் பெயர் மாற்றம் முடிந்ததை தெரிவிக்கும் ஆவணங்களை உரிமையாளரின் முகவரிக்கு வழங்குவதன் மூலம் செயல்முறை முடிவடையும்.
வீட்டில் இருந்த படியே பட்டா வாங்குவது எப்படி
பெற்றோர்கள் இல்லாத சொத்திற்கு பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |