பத்துப்பாட்டு அகம் புறம் நூல்கள் – Paththupaattu Agam Puram Noolgal
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். சரி இங்கு நாம் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களை அகம், புறம், அகப்புறம் என வகைப்படுத்தலாம். அவை பின் வருமாறு:
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஐந்து வகை இலக்கணம்
அகம், புறம், அகப்புறம் என வகைப்படும் பத்துப்பாட்டு நூல்கள் | பத்துப்பாட்டு நூல்கள் அகம் புறம் சார்ந்த நூல்கள்:
அகம்:
- முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டு
- நெடுநல்வாடை
- பட்டினப்பாலை
புறம்:
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
அகம், புறம், அகப்புறம் என வகைப்படும் எட்டுத்தொகை நூல்கள்:
அகம்:
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அநானூறு
- கலித்தொகை
புறம்:
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
அகப்புறம்:
- பரிபாடல்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |