பட்டா சிட்டா என்றால் என்ன தெரியுமா.?

Advertisement

பட்டா சிட்டா என்றால் என்ன.?

வணக்கம் நண்பர்களே இன்று நம் தமிழ் பதிவில் பட்டா சிட்டா என்றால் என்ன, அவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க. பட்டா சிட்டா என்பது ஒருவரது சொத்து ரீதியான மற்றும்  சட்டரீதிகலானா உரிமைகளை நிரூம்பிக்கும் பொழுது பயன்படுத்தப்படும் ஆவணம் தான் பட்டா என்று அழைக்கப்படுகிறது, மேலும் பட்டா சிட்டா பற்றிய விவரங்களையும், பட்டாவின் வகைகளையும் நம் பதிவில் மூலம் படித்து அறியலாம் வாங்க.

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன?

 பட்டா சிட்டா | Patta Chitta in Tamil:

பட்டா சிட்டா ஆனது சொத்துக்கள் மீதான உரிமைகளை நிரூபிக்கும் ஆவணம் தான் பட்டா என்று அழைக்கப்டுகிறது. இவற்றை தமிழ்நாடு அரசு நில பதிவேடு வசதியை மக்களுக்காக ஏற்படுத்தி அவற்றை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வதற்கும், வருவாய் துறையின்  கீழ் இந்த சேவைகள்  தொடங்கப்பட்டு இருந்திருக்கிறது.

பட்டா என்பது ஒரு நிலத்திற்கு வருவாய் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்துக்கள் அமைந்துள்ள அளவு, பகுதிகள், உரிமையாளர்கள் போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் தான் சிட்டா என்று அழைக்கபடுக்கிறது.  ஆனால் இன்றிய காலகட்டத்தில் இந்த பட்டா சிட்டா  ஆவணங்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்கும் பல வசதிகள் ஏற்படுத்தபட்டு உள்ளது.

பட்டா ஆனது நிலத்துக்கு மட்டும் தான் பயன்படும், இவை அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பொருந்தாது என்றும் சொல்லப்படுகிறது. பட்டா எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் ஒருவரின் நிலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் இந்த பட்டா ஒரு முக்கிய ஆவணமாக இருந்து அந்த பிரச்சனைகளை தீர்வு அடைவதற்கும் முக்கியமாக இருக்கிறது.

பட்டாவின் வகைகள் | Patta Vagaigal

நில ஒப்படை பட்டா  என்றால் என்ன?

நில ஒப்படை பட்டா என்பது அரசின் விவசாய நிலத்தை, சொந்தமாக வீடு , நிலம், மனை இல்லாமல் இருப்பவர்களுக்கு இளவமாகவோ அல்லது பணம் பெற்றுக்கொண்டோ  அந்த இடத்தை வழங்குவது தான் நில ஒப்படை பட்டா என்று அழைக்கப்டுகிறது.

ஏடி கண்டிஷன் பட்டா என்றால் என்ன?

ஏடி கண்டிஷன் பட்டா என்பது கிராமத்தில் உபரியாக இருக்கும் நிலத்தில் மனைகளாக பிரித்து, நிலம் இல்லாத பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது தான், வட்ட ஆதிதிராவிட தாசில்தாரின் பொறுப்பு என்றும் சொல்லப்படுகிறது. இதைத்தான் ஏடி கண்டிஷன் பட்டா என்று சொல்லப்படுகிறது.

நத்தம் பட்டா என்றால் என்ன?

நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு என்று பெயர், நத்தம் பட்டா என்பது தங்களுடைய வருவாய் கிராமத்தில் சொந்தமாக வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த நத்தம் பட்டா வழங்கபடுகிறது. அதாவது புறம் போக்கு இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த வகை பட்டா வழங்கப்டுக்கிறது.

TSLR பட்டா என்றால் என்ன?

TSLR பட்டா என்பது நகரத்தின் நில அளவையும் அதனுடைய பதிவேடு ஆவணத்தையும் குறித்து தான் டிஎஸ்எல்ஆர் பட்டா என்று அழைக்கபடுக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement