Patta vs Document in Tamil
சொத்து பிரச்சனை தான் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மொத்த சொத்தும் போகுமா என்பது ஒரு பிரச்சனை..! 5 வருடம் உங்களின் இடத்திற்கு வராமல் இருந்தால் அந்த இடத்திற்கு வேறு பட்டா ரெடி பண்ணிவிடுவார்கள். ஆனால் Registration செய்ததில் வேறு ஒருவர் பெயர் இருக்கும். இதுவே இருவரின் இடையில் ஒரு பிரச்சனையாக வந்துவிடும். இதற்கு கோர்ட் வரை சென்று ஒருவருக்கு சாத்தியமாக மாற்ற முடியும். அந்த ஒருவர் யார் என்பது தான் இந்த பதிவின் பதிலாக இருக்க போகிறது. சரி வாங்க அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Patta vs Document in Tamil:
முதலில் பட்டா, சிட்டா பாத்திரம் என்றால் என்ன என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க.
பட்டாவில் அந்த இடத்தினுடைய ஓனர் யார் என்று பதிவு செய்திருக்கும். இந்த பட்டா வருவாய்துறையிலிந்து கொடுக்கக்கூடிய ஒரு ஆவணம். பட்டாவில் தனி பட்டா கூட்டு பட்டா என்று நிறைய வகைகள் உள்ளது.
தனி பட்டா என்பது ஒரு இடத்திற்கு ஒருவர் மட்டும் ஓனராக இருப்பார்கள். கூட்டு பட்டா என்றால் அந்த இடத்திற்கு 2, 3 பேர் ஓனராக இருப்பார்கள்.
சிட்டா என்றால் என்ன..?
பட்டாவில் உரிமையாளர் பெயர் இருக்கும் அல்லவா, ஆனால் சிட்டாவில் கூடுதலாக சில விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது அந்த இடம் எவ்வளவு அளவு, அந்த இடம் எங்கு உள்ளது, அது எதற்கு பயன்படுகிறது என சில விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
பத்திரம் என்றால் என்ன..?
ஒருவரிடமிருந்து ஒரு இடத்தை வாங்கினால் அதனை பத்திரமாக எழுதி அதனை பதிவுத்துறையில் பதிவு செய்து தருவது தான் பத்திரம்.
அப்படியென்றால் பத்திரத்தில் பெயர் இருந்தால் செல்லுமா அல்லது பட்டாவில் பெயர் இருப்பது செல்லுமா..?
பத்திரத்தில் பெயர் உள்ளது தான் செல்லும். அதாவது பதிவு செய்த பத்திரம் இல்லாமல் பட்டா வாங்க முடியாது.
அந்த பட்டாவில் யார் பெயர் உள்ளது என்பதை பார்க்கவேண்டும். அதில் பெயர் தவறாக உள்ளது என்றால் அதற்கு Parent Document அதாவது மூல பத்திரம் இருக்கும். அதனை வாங்கி பார்த்தால் தெரியும் யாருடைய பெயர் உள்ளதோ அது தான் செல்லும். ஆகவே பத்திரம் வாங்கியதும் பட்டா வாங்குவது அவசியமானது. ஆகவே பத்திரத்தில் யார் பெயர் உள்ளதோ அது தான் செல்லும்.
அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்
இப்போது பத்திரத்தில் உள்ள பெயர் செல்லுமா பட்டாவில் உள்ள பெயர் செல்லுமா என்றால் அதனை சிவில் கோர்ட்டில் வழக்கு உரைத்து தான் தெரிந்து கொள்ள முடியும். இப்போது அனைவருக்கும் இருக்கும் கேள்வி என்னவென்றால், பட்டாவில் யார் பெயர் உள்ளது பத்திரத்தில் யார் பெயர் உள்ளது என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது. அது மிகவும் சுலபமானது.
பட்டாவில் யார் பெயர் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள இந்த இணையதளத்திற்கு eservices.tn.gov.in சென்று உங்களின் பட்டாவின் விவரங்களை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல் பத்திரத்தில் யார் பெயர் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள tnreginet.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பத்திரத்துடைய விவரங்களை கொடுத்து பத்திரத்தில் யார் பெயர் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கடன் உறுதி பத்திரம் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |