Peach Fruit in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள் அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக இந்த உலகில் நாம் மிக மிக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். இப்படி நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ள உணவு பொருட்களை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் Peach பழத்தின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Peach Fruit Details in Tamil:
பீச் அல்லது குழிப்பேரி என்பது ரோசாசி என்ற இனத்தை சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இந்த குழிப்பேரியானது இனிப்பு செறிந்த பழங்களை விளைவிக்கிறது.
அதேபோல் இந்த பழமானது ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். பொதுவாகன் இந்த குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இவற்றை பயன்படுத்தி கேக் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாக மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியே இவை விளைவதற்கு ஏற்ற காலநிலை ஆகும்.
கிவி பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்
பிறப்பிடம்:
இந்த குழிப்பேரி பழமானது கிழக்கு சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவரம் ஆகும். ஆனால் தற்போது உலகின் பல இடங்களில் இது பரவி காணப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இது குழிப்பேரி என்று தமிழ் மொழியிலும், பீச் ஃப்ரூட் ( Peach Fruit) என்று ஆங்கில மொழியிலும், பெர்சியாவில் பெர்சிகா என்றும், ப்ரூனஸ் பெர்சிகா ( Prunus Persica) என்ற தாவரவியல் பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
இப்பழங்களில் உயிர்ச்சத்துக்களும், தாதுப்பொருட்களும்,பொட்டாசியம், புளோரைடுகள், இரும்பு மற்றும் பீட்டாகரோடினும் அதிகம் உள்ளன. மேலும் இதில் 40% மட்டுமே கலோரி உள்ளது.
அதேபோல் இந்த குழிப்பேரி பழத்தில் வைட்டமின் C மற்றும் A ஆகியவை அதிக அளவு நிறைந்துள்ளது.
உளுந்தினை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்
பயன்கள்:
பொதுவாக இப்பழங்கள் திசுக்கள் கூட்டிணைப்பாக செயல்பட உதவி புரிகின்றன.
அதேபோல் இந்த பழங்கள் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கின்றன.
இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தினையும், இதயத்துடிப்பையும் சீராக்க உதவும்.
சி மற்றும் ஏ உயிர்ச்சத்துக்கள் இப்பழங்களில் அதிகமாகக் காணப்படுவதால் உடலினில் நோய் எதிர்ப்புச் சக்தியினையும், பார்வைத்திறனையும் அதிகரிக்கச் செய்கின்றன.
மேலும் இவை வாய்ப்புற்று நோயினைத் தடுக்கும் சக்தி கொண்டதாகும்.
அதேபோல் இவை உடலின் செல்கள் மற்றும் திசுக்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும் இப்பழங்கள் உதவுகின்றன.
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதை பற்றி முழுதாக தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |