Pen Personality Test
பொதுவாக ஒவ்வொருவருடைய குணங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், அது போல் முன்னோர்கள் நம்முடைய உடல் பாணியை வைத்து நீ இப்படி தான் இருப்ப என்று கூறுவார்கள், அதை நாம் காதிலே வாங்க மாட்டோம். அதாவது உங்களின் காலின் கட்டை விரலுக்கு பக்கத்து விரலானது பெரியதாக இருந்தால் கனவுனுக்கு அடங்க மாட்டாய் என்று கூறுவார்கள். இந்த பதிவில் நீங்கள் பேனா பிடித்து எழுதும் விதத்தை வைத்து உங்களின் குணங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பேனா பிடித்து எழுதும் விதத்தை வைத்து உங்களின் குணங்கள்:
ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல்:
நீங்கள் ஆல்காட்டிவிரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் பேனாவை வைத்து எழுதினால் புதிது புதிதாக உள்ள விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அமைதியான குணம் உடையவராக இருப்பீர்கள். உங்களின் உணர்ச்சிகளை வெளிப்படையாக பேச கூடியவர்களாக இருப்பீர்கள்.
மற்றவர்கள் உங்களை காயப்படுத்தினால் அமைதியாக இருப்பீர்கள். பதிலுக்கு அவர்களை எதிர்த்தும் பேச மாட்டீர்கள், காய படுத்தவும் நினைக்க மாட்டிக்கிறீர்கள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா
கட்டை விரல் பிடித்து எழுதுபவர்கள்:
கட்டை விரலில் பேனாவை பிடித்து எழுதுபவர்கள் லட்சியம் மிக்கவராக இருப்பீர்கள். நிறைய விஷயங்கள் கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். ஏதவாது ஒரு விஷயம் செய்ய போகிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை முழுவதுமாக தெரிந்து கொண்ட பிறகு தான் செய்ய ஆரம்பிப்பீர்கள். உங்களின் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள்.
ஆள்க்காட்டி விரல் மற்றும் நடு விரல்:
ஆல்காட்டி மற்றும் நடுவிரலுக்கு இடையில் பேனாவை பிடித்து எழுதுபவர்கள் வாழ்க்கையை இரசித்து வாழ கூடியபவர்களாக இருக்கிறீர்கள். உங்களது மனது கஷ்டப்படும் படி ஏதவாது நடந்தால் அதனை ஈசியாக மறந்தும் விடுவீர்கள், மன்னித்து விடுவீர்கள். வாழ்கின்ற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ விடும் என்று நினைப்பீர்கள்.
கட்டை விரல், ஆல்காட்டிவிரல், நடுவிரல்:
கட்டை விரல், ஆல்காட்டிவிரல், நடுவிரல் போன்ற விரல்களை பயன்படுத்தி எழுதுபவர்கள் இரண்டு குணங்களை உடையவர்களாக இருப்பீர்கள். சில நேரங்களில் மற்றவர்களை பற்றி விமர்சிப்பீர்கள், சில நேரங்களில் மற்றவர்களை பற்றி மரியாதையுடனும், தணிவுடனும் பேசுவீர்கள். சில சூழ்நிலைகளில் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள், எரிச்சலுடனும் இருப்பீர்கள். நீங்கள் வேலையில் தவறு செய்தாலும் பிடிக்காது, அது போல மற்றவர்கள் தவறு செய்தாலும் பிடிக்காது.
சிங்கப்பல் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |