பெண் பற்றிய பொன்மொழிகள்

Advertisement

பெண்கள் பற்றிய பொன்மொழிகள்

பெண் என்பவள் சக்தியின் அம்சமாக இருக்கிறாள். இந்த உலகின் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சக்தியையும் அளிக்கும் வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். சொல்லப்போனால், இவ்வுலகில் நாம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசய சக்தியே பெண்கள்! மகளிர் தினம் அன்று மட்டும் பெண்களை போற்றி பாட கூடாது, அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பெண்களை போற்ற வேண்டும்.

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதில் பெண்கள் தான் சிறந்தவர்கள், ஆண்களை விட பெண்கள் மனதளவில் வலிமை மிக்கவராக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைப்பார்கள். அவர்களை எப்படி புரிந்து கொள்வது என்று நினைப்பதை விட அவர்களை நேசிக்க ஆரம்பியுங்கள், தானாக புரிந்து கொள்வீர்கள். இந்த பதிவில் பெண்களை பற்றிய பொன்மொழிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

Pen Patriya Palamoli

1.மங்கையா ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா! – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

2. ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். ஆனால்..
ஒரு விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் மட்டும் சொல்லுங்கள் – மார்கரெட் தட்சர்

3.எந்த வீட்டில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் தங்கும். – மனு

4. பெண் மட்டுமே மனிதனின் உயர்ந்த செயல் அனைத்திற்கும் விருட்சம்! – ஜேம்ஸ் எல்லீஸ்

5. உலகில் பயன்படுத்தப்படாத திறமைகளின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் பெண்கள். – ஹிலாரி கிளிண்டன்

பெண்மையை போற்றும் திருக்குறள்

6. பெண்களின் மௌனத்தின் கர்ஜனையை என்னால் கேட்க முடிகிறது! – தாமஸ் சங்கரா

7. பெண்கள் தேநீர் பைகள் போன்றவர்கள். வெந்நீரில் இருக்கும் வரை அவர்களின் உண்மையான பலம் நமக்குத் தெரியாது. – எலினோர் ரூஸ்வெல்ட்

8. பெண் மிகவும் சக்தி வாய்ந்தவள்! அவள் பயப்படாததால் அல்ல, பயம் இருந்தபோதிலும் அவள் மிகவும் வலுவாகச் இருப்பதால்! – ஆத்திகஸ்

9. நீ நேசிக்கவே பெண் இருக்கிறாள், புரிந்து கொள்ளப்படுவதற்காக அல்ல. -ஆஸ்கார் வைல்ட்

10. பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது – மில்டன்

11. ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான் – வால்டேர்

12. ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். -ஜவஹர்லால் நேரு

13. சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் – காந்தியடிகள்

14. பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர் – ரவீந்திரநாத் தாகூர்.

15. அன்பு காட்டுவதில் ஆண்கள் கஞ்சர்கள், ஆனால் பெண்கள் மிகப்பெரும் வள்ளல்கள்.
-அல்போன்ஸ் டி லாமர்டைன்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement