Peppermint in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருப்பவர்கள் அநேக பேர்கள் உள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பலவகையான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் அவையாவும் முழுமையை அடைந்துள்ளதா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். உதாரணத்திற்கு நாம் அனைவரும் சாப்பிடும் உணவு பொருட்களை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரிந்திருக்காது. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் மிளகுக்கீரையின் (Peppermint) பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Peppermint Details in Tamil:
மிளகுக்கீரை (Peppermint) என்பது புதினாவின் ஒரு கலப்பின இனமாகும். அதாவது இது புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும்.
இதனை முதன் முதலில் சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலசு இலினேயசு மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
மேற்கத்திய மிளகுக்கீரை மெந்தா × பைபெரிட்டாவிலிருந்து பெறப்பட்டது ஆகும். சீன மிளகுக்கீரை அல்லது போஹே மற்றும் எம். ஹாப்லோகாலிக்ஸின் புதிய இலைகளிலிருந்து பெறப்பட்டது.
இந்த மிளகு கீரை பொதுவாக சமையலில் மற்றும் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மூலிகை தாவரம் ஆகும். அதேபோல் இது ஒரு வற்றாத தாவரம் ஆகும்.
அதேபோல் இது ஒரு வேர்த்தண்டினை கொண்ட தாவரம் ஆகும். இது 30-90 செமீ (12-35 அங்குலம்) உயரம், மென்மையான தண்டுகள், குறுக்குவெட்டில் சதுரமாக வளரும் தாவரம் ஆகும்.
ராகியை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பிறப்பிடம்:
இந்த மிளகுக்கீரை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகில் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
மிளகுக்கீரை என்று தமிழிலும், பெப்பெர்மிண்ட் (Peppermint) என்று ஆங்கிலத்திலும், மெந்தா × பைபெரிடா ( Mentha × piperita) என்றால் அறிவியல் பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
புளிச்ச கீரையை சாப்பிட்டால் மட்டும் போதாது அதனை பற்றியும் தெரிஞ்சுக்கணும்
ஊட்டச்சத்துக்கள்:
இந்த மிளகுக்கீரையில் வைட்டமின்-எ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா-3 அமிலம் ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பயன்கள்:
இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த எண்ணெய் குடல் எரிச்சலை குரைக்க உதவுகிறது.
அதேபோல் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி நீராவி பிடித்தால் சைனஸ் பிரச்சனை நீங்கும்.
இந்த எண்ணெய் வலிநிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
முருங்கை கீரையை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சி வைச்சிருக்கணும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |