உங்களின் ஆளுமை திறனை சோதியுங்கள்
ஒரு நபரின் ஆளுமைத் திறனை எதையெல்லாம் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு பல அளவீடுகள் இருக்கின்றன. ஒரு நபரின் திறமையை அவரின் தோற்றத்தை வைத்து கணக்கிட கூடாது என்பர். இன்று உலக அளவில் கைரேகைகள் ஒருவரின் குண நலன்களை கண்டுபிடிக்க உதவுகின்றது என்று நம்புகின்றனர். உளவியல் ரீதியாக பல விதமான சோதனைகள் மூலம் ஒரு நபர் எப்படிபட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்களின் செயல்பாடுகளை உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்து எளிதாக கண்டுபிடிக்க முடியும். அந்தவகையில் இன்று உங்கள் பிடித்த நிறத்தை கொண்டு உங்களின் குணத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்….
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பிடித்த வண்ண ஆளுமை சோதனை:
உங்களுக்கு பிடித்த வண்ணங்களை வைத்து உங்கள் ஆளுமை திறனை கணக்கிடலாம் வாருங்கள்…
சிவப்பு:
உங்களுக்குப் பிடித்த நிறம் சிவப்பு என்றால், நீங்கள் உங்கள் சொந்த வழியில் செல்ல விருப்பப்படுவீர்கள்.உங்களுக்கு பிடித்ததை பெறுவதற்கும் அதற்கு மக்களை கையாளுவதிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.
உங்கள் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டிர்கள்.
உங்கள் தொழில் மிகவும் ஈடுபாடுடன் காணப்படுவீர்கள். ஆனால் அதில் ஏதேனும் விருப்பமில்லை என்றால் விடாப்பிடியாக அதில் இருந்து வெளியேறிவிடுவீர்கள்.
நீலம்:
உங்களுக்குப் பிடித்த வண்ணம் நீலமாக இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் தேடிக்கொண்டு இருப்பீர்கள். உங்கள் உறவுகளிடம் எப்போதும் அக்கறைவுடனும் அதிக அன்புடனும் நடந்துகொள்வீர்கள்.
நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் மனபூர்வகாமாவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள்.
உங்களுக்கு இயற்கை மீதான ஈர்ப்பு அதிகம் இருக்கும்.
நீங்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பதில் மிகவும் ஈடுபாடும் மகிழ்ச்சியம் அடைவீர்கள்.
உங்கள் பெயரின் எழுத்துகளை வைத்து உங்கள் பண்பை தெரிந்துகொள்ளலாம்…..
பச்சை:
உங்களுக்குப் பிடித்த வண்ண பச்சையாக இருந்தால், நீங்கள் ஒரு பார்வையுடையவராக இருப்பீர்கள்.
நீங்கள் சிக்கலை எளிதில் தீர்க்க கூடியவராகவும் ஏதேனும் பக்குவமாக கையாளும் திறன் உடையவராகவும் இருப்பீர்கள்.
நீங்கள், நீதி மற்றும் நியாயம் ஆகியவற்றை மதிக்க கூடியவராக இருப்பீர்கள்.
நீங்கள் உங்கள் உறவுகள் மீது அதிக அன்பு கொண்டவராக காணப்படுவீர்கள்.
நீங்கள் தனிமை விருப்பியாகவும் அனைவரையும் எளிதில் நம்ப கூடியவராகவும் இருப்பிர்கள்.
தங்கம்:
உங்களுக்குப் பிடித்த நிறம் தங்கம் என்றால், கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் ஒரு வெற்றியாளராக இருப்பீர்கள். அல்லது உங்கள் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.
உங்களிடம் செல்வம், சாதனை, பொருள், விருதுகள் மற்றும் விருதுகள் என்று நிறைவான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
நீங்கள் கௌரவத்தையும் ஆடம்பரத்தையும் மதிக்க கூடியவராக இருப்பீர்கள்.
உங்களுக்கு ஆன்மீகம் மீது ஆழமான புரிதல் இருப்பதாக உணருவீர்கள்.
ஆரஞ்சு:
உங்களுக்குப் பிடித்த நிறம் ஆரஞ்சு என்றால், நீங்கள் ஒரு தன்னிச்சையான, நம்பிக்கையான, அவுட்-ஆஃப்-பாக்ஸ் சிந்தனையாளராக இருப்பீர்கள்.
உங்களிடம் அதிக நகைச்சுவை உணர்வும், தைரியமும், உற்சாகமான மனமும் இருக்கும்.
உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.
உங்களுக்கு சாகசங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். நாங்கள் ஈடுபடும் அனைத்திலும் புதுமையை எதிர்பார்ப்பீர்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |