Pilai Thiruthal Pathiram
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து வருகிறோம். அந்தவகையில் இப்பதிவில் பத்திரம் பிழை திருத்தம் செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம். பத்திரம் என்பது சட்டப்பூர்வ ஆவணமாகும். ஒரு குறிப்பிட்ட நபர் அவருடைய சொத்துக்களை சட்டப்பூர்வமாக சில தனிப்பட்ட விவரங்களை அளித்து பெறக்கூடியது பத்திரம் ஆகும். இது சொத்தினை மற்றவருக்கு சட்டபூர்வமாக விற்பதற்கு உதவுகிறது. எனவே, இதில் சில தவறுகள் இருந்தால் அதனை எப்படி திருத்தும் செய்வது எப்படி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பத்திரம் பிழை திருத்தம் செய்வது எப்படி.?
பத்திரத்தில் உள்ள எழுத்து மற்றும் வார்த்தை போன்ற பிழையை திருத்தவே பிழை திருத்தல் பத்திரம் எனப்படும். இதனை, அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (RECTIFICATION DEED) என்று கூறுவார்கள்.
இரண்டு வகையான பிழை திருத்தம் பாத்திரங்கள் உள்ளன. அவை, சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மற்றொன்று உரிமை மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம் ஆகும்.
கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
விடுதலைப் பத்திரம் என்றால் என்ன விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
சாதாரண பிழை திருத்தல் பத்திரம்:
பத்திரத்தில் உள்ள திசைகள், ஊர் பெயர், நமது பெயர் போன்ற இப்படி தனக்கு மட்டும் பிரச்சனையாக உள்ள பத்திரங்களுக்கு சாதாரண பிழை திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
சாதாரண பிழை திருத்தல் பத்திரத்திற்கு மொத செலவும் 500 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
எனவே, பத்திரத்தில் உள்ள பிழையினை உங்களுக்கு சொத்தினை விற்பனை செய்து பத்திரம் ஏற்படுத்தி கொடுத்த நபரால் மாற்றி கொள்ளலாம். இதனை தான் பிழை திருத்தல் பத்திரம் என்கிறோம்.
உரிமை மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம்:
பத்திரத்தில் சொத்துக்களின் அளவு மாறி இருந்தால் அதற்கு போடப்படுவதுதான் உரிமை மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம். அதாவது, உதாரணமாக பத்திரத்தில் 1 ஏக்கர் 2 சென்ட் என்பதை மாற்றி தவறாக 2 ஏக்கர் 1 சென்ட் என்று எழுதப்பட்டிருப்பது ஆகும். இதற்கு அதிக முத்திரை கட்டணம் செலுத்தி பிழையை திருத்தி கொள்ள வேண்டும்.
அசல் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால் உடனே செய்ய வேண்டிய விஷயங்கள்!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |