ஏன் பிள்ளையார் எறும்பு என பெயர் வந்தது காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

பிள்ளையார் எறும்பு

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் சரி எறும்பு, ஈ மற்றும் பூச்சிகள் இது போன்றவற்றை வந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக எறும்பு என்று சொன்னால் அதில் சிவப்பு எறும்பு, கருப்பு எறும்பு, கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு மற்றும் புல்லட் எறும்பு என நிறைய வகைகள் இருக்கிறது. இத்தகைய எறும்பு வகைகளுக்கு தனித்தனி பெயர்கள் இருந்தாலும் அந்த பெயருக்கு பின் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. அந்த வரிசையில் பிள்ளையார் எறும்பு சொல்வதற்கான காரணம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்கள் யோசிக்கலாம் பிள்ளையார் எறும்பு என்று சொல்வதற்கான பின் அப்படி என்ன பெயர் காரணம் இருக்க போகிறது என்று. உங்களுடைய யோசனைக்கான பதிலை பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.

தமிழ்நாடு என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா.?

பிள்ளையார் எறும்பு என பெயர் வந்தது ஏன்..?

பிள்ளையார் எறும்பு என பெயர் வந்தது ஏன்

பொதுவாக நமக்கு தெரிந்த வரையில் எறும்பு என்று சொன்னவுடன் நம் மனதில் தோன்றுவது அது கடிக்கும் என்று தான்.

சிறிய குழந்தைகள் கூட எறும்பினை பார்த்தவுடன் அதனை பூச்சி என்று தான் கூறும். ஏனென்றால் அது கடித்து விடும் என்ற பயத்தினால் தன்னை அறியாமலேயே எறும்பை பூச்சி என்று கூறுகிறது. அதன் பிறகு போகப்போக தான் அது எறும்பு என்ற விவரம் தெரிய வருகிறது.

இப்படி இருக்கும் போது நம் முன்னோர்கள் ஒரு வார்த்தையினை கூறுவார்கள் பிள்ளையார் எறும்பு யாரையும் கடிக்காது என்று. அத்தகைய கருப்பு எறும்பை மட்டும் பிள்ளையார் எறும்பு சொல்வதற்கான காரணம் என்ன..?

பொதுவாக கடவுள்களில் நாம் முதலில் வணங்க வேண்டிய ஒரு கடவுள் என்றால் அது பிள்ளையார் தான். அதுபோல நாம் எந்த ஒரு சுப காரியங்களை செய்ய போகிறோம் என்றால் கூட முதலில் பிள்ளையாரை வழிபடுவது நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து பழக்கமாக இருக்கிறது.

கோவிலுக்கு செல்லும் போது மற்ற தெய்வங்களுக்கு எதுவும் செய்கின்றோமோ இல்லையோ பிள்ளையாருக்கு ஒரு தேங்காயாவது உடைத்து வழிபடுவோம்.

அது மட்டும் இல்லாமல் பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று பிள்ளையாருக்கு இனிப்பால் ஆன கொழுக்கட்டை வைத்து சாமி கும்பிடுகிறோம்.

 இப்படி பிள்ளையாருக்கு படைக்கும் எதுவாக இருந்தாலும் அதனை கருப்பு எறும்புகள் தான் அதிகமாக தேடி உணவாக சாப்பிடுவதாலும் மற்றும் யாருக்கும் எந்த கெடுதலும் கருப்பு எறும்புகள் கொடுப்பது இல்லை என்ற காரணத்தினால் கருப்பு எறும்பு பிள்ளையார் எறும்பு என்று சொல்லப்படுகிறது.  

இதையும் படியுங்கள்⇒ எறும்புகள் வட்டமாக சுற்றி வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement