Pine Nuts in Tamil
காய்கறிகள் மற்றும் பழங்களை பொறுத்தவரை நமது உடலுக்கு அது அதிக நன்மையினை அளிக்கும் என்பதை பார்த்து தான் எடுத்துக்கொள்வோம். ஏனென்றால் இவை இரண்டிலும் நமது உடலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதன் படி பார்த்தால் உலர் உணவு பொருட்களிலும் அதிக சத்துக்கள் இருப்பதனால் அதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் மாலைநேரத்தில் ஒரு உணவாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இவை அனைத்திலும் பொதுவான முறையில் சத்துக்கள் என்பது இருந்தாலும் கூட ஒவ்வொரு உலர் உணவு பொருட்களும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் அதனுடைய பிறப்பிடம் முதல் மற்ற அனைத்துமே மாறுபடுகிறது. எனவே இன்று பைன் நட்ஸ் என்பதனை பற்றிய முழு தகவலையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பைன் நட்ஸ்
பற்றிய தகவல்கள்:
பைன் நட்ஸ் உணவாக உண்ணக்கூடிய ஒரு விதை ஆகும். அதிலும் குறிப்பாக மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு உணவாக இது இருக்கிறது. மேலும் இது நீளமான வடிவத்தை கொண்ட ஒரு நட்ஸ் ஆகும் காணப்படுகிறது.
இத்தகைய பைன் நட்ஸ் ஆனது பல வகையான இனங்களில் இருக்கிறது. மேலும் அந்த இனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்தகைய உற்பத்தி திறனை பொறுத்து இதனுடைய எடை மற்றும் அளவானது வேறுபடுகிறது.
- சைபீரியன் பைன்
- லேஸ்பார்க் பைன்
- சீன வெள்ளை பைன்
- சைபீரியன் குள்ள பைன்
மேல் சொல்லப்பட்டுள்ள இனங்கள் குறைவாக பயிரிடப்பட்டாலும் கூட சில்கோசா பைன் மற்றும் கொரியன் பைன் இவை இரண்டும் மேற்கு இமயமலை மற்றும் வடகிழக்கு ஆசியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
எனவே பைன் கூம்பின் சுற்றுசூழல் காலநிலையினை பொறுத்தே அதனுடைய அறுவைடையாக இருந்தாலும் சரி, உற்பத்தி அளவாக இருந்தாலும் சரி அமையும். மேலும் இதற்கு ஓரளவு சூரிய வெளிச்சம் என்பது தேவைப்படுகிறது.
அதேபோல் பைன் நட்ஸ்கள் மரத்தில் இருந்து கிடையக்கூடியது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
பைன் நட்ஸில் உள்ள சத்துக்கள்:
சத்துக்கள் | சத்துக்களின் அளவு |
கொழுப்பு சத்து | 19 கிராம் |
கார்போஹைட்ரேட் | 3.7 கிராம் |
நார்சத்து | 1 கிராம் |
சர்க்கரை | 1 கிராம் |
கலோரிகள் | 191 |
மேலே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள சத்துக்கள் இல்லாமல் மெக்னீசியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் K, வைட்டமின் E, வைட்டமின் A மற்றும் புரத சத்துக்களும் இதில் காணப்படுகிறது.
பைன் நட்ஸ் பயன்கள்:
- பைன் நட்ஸில் பினோலெனிக் அமிலம் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த இந்த நட்ஸை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை ஆனது குறையத்தொடங்கும்.
- அதேபோல் இதில் கார்போஹைட்ரேட் இருப்பதனால், இதனை நாம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் காணப்படும் இரத்த சர்க்கரையின் அளவானது படிப்படியாக குறைய தொடங்கும்.
- வைட்டமின் A, புரதம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுவதனால் இதனை நாம் எடுத்துக்கொள்வதனால் கண்களுக்கு மிகவும் நல்லது.
பைன் நட்ஸ் தீமைகள்:
பைன் நட்ஸினை அதிக உடல் எடை உள்ளவர்கள் எடுத்துக்கொள்வதனால் மூலம் அவர்களுக்கான உடல் எடையினை இன்னும் கூடுதலாக அதிகரிக்க செய்யும். ஆகவே சரியான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |