மாதுளை பழத்தினை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Pomegranate in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது நாம் அன்றாடம் பலவகையான உணவுப்பொருட்களை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதாவது நாம் பயன்படுத்தும் உணவு பொருட்களின் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள் மற்றும் அதனை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

அதேபோல் தான் நம்மில் பலரும் மிகவும் விரும்பி சாப்பிடும் மாதுளை பழத்தினை பற்றி மேலே கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கு மாதுளை பழத்தினை பற்றி மேலே கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் தெரியும் என்றால் பரவாயில்லை. மாறாக தெரியாது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Pomegranate Tree Information in Tamil:

Pomegranate Tree Information in Tamil

மாதுளை என்பது லித்ரேசி என்ற குடும்பத்தை சேர்ந்த சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரம் ஆகும். மேலும் இது வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரம் ஆகும்.

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதன் பூ, பிஞ்சு மற்றும் பழம் ஆகியவை நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை ஆகும்.

மாதுளையின் வகைகள்:

  • ஆலந்தி
  • தோல்கா
  • காபுல்
  • மஸ்கட் ரெட்
  • ஸ்பேனிஷ் ரூபி
  • வெள்ளோடு
  • பிடானா
  • கண்டதாரி

போன்ற ரகங்கள் உள்ளது. மேலும் ஒவ்வொரு ரகத்திற்கும் தனித்துவமான சுவை மற்றும் சத்துக்கள் உண்டு. அது போல் சில ரகத்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு.

சேப்பக்கிழங்கினை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்

பெயர்க்காரணம்:

பொதுவாக பெண்களின் உள்ளத்தை மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியாது பல ரகசியங்கள் உள்ளது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் “மாது+உள்ளம்+பழம்” என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது.

பிறப்பிடம்:

இதன் பிறப்பிடம் ஈரான் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மாதுளைப்பழம் 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.

வேறுபெயர்கள்:

Pomegranate Details in Tamil

மாதுளை பழத்திற்கு தமிழ் மொழியில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் போன்ற வேறுபெயர்கள் உண்டு. மேலும் ஆங்கில மொழியில் மாதுளை பழத்திற்கு பொமிகிரேனட் (Pomegranate) என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.

கருணைக்கிழங்கினை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிபாக தெரிஞ்சிகோங்க

ஊட்டச்சத்துக்கள்:

மாதுளையில் நீர், ஆற்றல், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்சத்து, சர்க்கரை ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் பி 6, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பயன்கள்:

மாதுளையில் உள்ள இனிப்பு வகையை சேர்ந்த மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.

மேலும் பித்தம் மற்றும் இருமலை போக்க உதவுகிறது.

இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்புகளை வலுப்பெறுகிறது.

இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்துகிறது.

தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சிறுநீரக பிரச்சினைகளை தடுக்கிறது.

சவ்வரிசியை சாப்பிட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement