பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் | Pongal Festival Sirappugal in Tamil
தை மாதம் என்றாலே பொங்கல் தான் நினைவிற்கு வரும். இந்த பண்டிகையானது தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது என்று தான் தெரியும். மற்றபடி அதனுடைய சிறப்புகள் எல்லாம் தெரியுமா என்று கேட்டால் தெரியாது. இந்த பண்டிகை மட்டுமில்லை நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் சிறப்புகள் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனால் தான் நம்முடைய பதிவில் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Pongal Festival Sirappugal:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் விமர்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். கிராமப்புறங்களில் எல்லா பண்டிகைகளை விட இந்த பொங்கல் பண்டிகையைத்தான் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். பாரத பெருமைமிகு நம் தாய் மொழி தமிழின் முக்கியத்துவம் வாய்ந்த திருநாளில் ஓன்று தான் இந்த தைத்திருநாள் பொங்கல் பண்டிகை.
உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் ஜாதி, மதம் பேதமின்றி சந்தோசமாக கொண்டாடக்கூடிய ஒரு திருநாள் ஆகும். உலகம் முழுவதுமே பொங்கல் திருநாளை கொண்டாடும் மக்கள் இருக்காங்க.
பொங்கல் என்றாலோ நம்ம திருவள்ளுவரை ஞாபகபடுத்துவதுதான் மிக முக்கியமாக நம் தமிழரோட பெருமையை மேலும் சிறப்புடைய செய்கிறது.
அதைவிட மிக முக்கியமாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சிரியனுக்கும், விவசாயத்திற்கு மிகவும் உதவும் கால்நடைகளுக்கும், மனிதர்களின் பசியை போக்க அயராது உழைக்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதற்கே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் பற்றி சில வரிகள்
தைபொங்கலுக்கு முதல் நாள் போகி பொண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம், போகி பண்டிகை என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை அனைத்தும் ஏறக்கட்டி, அதனை வீட்டில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, பொங்கல் திருநாளை கொண்டாட வீட்டை சுத்தம் செய்வார்கள். இந்த நாளில் தேவை இல்லாத துணிகள், மரத்தால் ஆன பொருட்கள், காகிதங்கள் ஆகியவற்றை எரிப்பார்கள். அப்போது நம் மனதில் இருக்கும் கவலைகள், கஷ்டங்கள், மன அழுத்தங்கள் அனைத்தயும் அந்த தீயிலே எரித்துவிட்டு, புதிய ஒரு வாழ்க்கைக்கு தயாராகுவார்கள்.
தைப்பொங்கல்: பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைத்து இயற்கைக்கும், சூரியனுக்கு படைத்து நன்றி கூறி, பிறகு வீட்டில் இருப்பவர்கள் உண்டு மகிழ்வார்கள்.
மூன்றாவது நாளான மாட்டு பொங்கல் அன்று விவசாயத்திற்கு பெரிய அளவில் உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாட்டு தொழுததை சுத்தம் செய்து, மாடுகளை குளிப்பாட்டி, கால்நடைகளை வண்ண வண்ண மாலைகளினால் அலங்கரித்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி. பிறகு அந்த மாட்டு தொழுத்தத்திலேயே பொங்கல் வைத்து மாட்டிற்கு படைத்தது கொண்டாடுவார்கள்.
காணும் பொங்கல்: நான்காவது நாள் கொண்டப்படும் விழா காணும் பொங்கல், இந்த நாளில் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, பேசி மகிழ்ந்து விருந்துகள் தயார் செய்வார்கள், அல்லது வகை வகையான சோற்றினை கிளறி, வெளியிடங்களுக்கு சென்று அதாவது ஆறு, ஏறி, கடல் போன்ற இடங்களுக்கு சென்று பேசி மகிழ்ந்து, உணவருந்திவிட்டு வருவார்கள்.
இந்த பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுமே கிராமங்களில் மிகவும் நன்றாக இருக்கும், இந்த நான்கு நாட்களுமே கிராமங்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்துவார்கள். ஆர்கெஸ்ட்டா நடைபெறும். இதனையெல்லாம் கண்டுகளித்து மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது.?
பொங்கல் பண்டிகையானது விவசாயிகளின் உழைப்பை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வகையில் நெல்லை கொண்டு பொங்கல் வைத்து இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.
பொங்கல் பண்டிகை மூலம் இயற்கைக்கு நன்றி செலுத்தப்படுகிறது. மழை, நிலம், நீர் போன்ற இயற்கை வளங்களின் உதவியால் விவசாயம் செழித்து வளர்கிறது என்பதை உணர்த்துகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |