பொங்கலுக்கு பாடக்கூடிய பொங்கல் பாடல்கள்.! | Pongal Paadal Varigal

Advertisement

பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள் | Pongal Padalgal Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பொங்கலுக்கு பாடக்கூடிய பல்வேறு பொங்கல் பாடல்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தை முதல் நாள் கொண்டாடக்கூடிய திருநாள் தான் தைத்திருநாள். தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகை தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் .

பொங்கலுக்கு பெண்கள் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து பொங்கல் தொடர்பான பாடல்கள் அல்லது கும்மி பாடல்கள் போன்றவற்றை பாடி பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு பொங்கல் பாடல்களை அதன் வரிகளுடன் கொடுத்துள்ளோம்.

Pongalo Pongal Tamil Padal:

பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்

பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடைக் கட்டிடும்…
தெய்வ மங்கையடி…

குழு : ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…

குழு : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…

பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால…
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால…
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா…
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா…

பெண் : செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்…
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்…

குழு : நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது…
வானில் இல்லையடி…
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது…
கனவில் இல்லையடி…

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்…
தெய்வ மங்கையடி…

பொங்கல் விளையாட்டு போட்டிகள் பெயர்கள்..!

பொங்கல் கும்மி பாடல் வரிகள்:

சாடியோட தேசத்துல ஏலேலக்கும்மி ஏலேலோ
சாஞ்சிருக்கும் சம்பா நெல்லு ஏலேலக்கும்மி ஏலேலோ
வௌஞ்சிருக்கும் சம்பாநெல்லு ஏலேலக்கும்மி ஏலேலோ
அரியறுத்து திரிதிரித்து ஏலேலக்கும்மி ஏலேலோ
அன்னம் போலக் கட்டுக்கட்டி ஏலேலக்கும்மி ஏலேலோ
காதம் காதம் போறொமின்னா ஏலேலக்கும்மி ஏலேலோ
கணத்தக்கட்டு வாங்கமையா ஏலேலக்கும்மி ஏலேலோ
நீ என்னாத் தர ஏதுத்தர ஏலேலக்கும்மி ஏலேலோ
நட்டங்க நல்ல மொரமெடுத்து ஏலேலக்கும்மி ஏலேலோ
நாதகுத்தப் பிடி நெல்லுத் தரேன் ஏலேலக்கும்மி ஏலேலோ
கையத்தட்டு ஏலேலோ கும்மி ஏலேலோ
பச்சோ வளையத்தட்டு ஏலேலோ கும்மி ஏலேலோ
பள்ளருக்க போவன்னே ஏலேலோ கும்மி ஏலேலோ
பயிறருக்க தோனலையோ
அந்த பயிறருக்க தோனலையோ
வளையத்தட்டு ஏலேலோ கும்மி ஏலேலே
நெல்லறுக்க தோனலையோ ஏலேலே கும்மி ஏலேலோ
நெல்லறுக்க தோனலையோ ஏலேலே கும்மி ஏலேலோ
தன்னானன்னானே தானே தன்னானன்னானே
தன்னானன்னானே தானே தன்னானன்னானே

Pongal Nattupura Padalgal Lyrics in Tamil:

கொட்டடி கொட்டடி தாழம்பூ
குனிஞ்சு கொட்டடி தாழம்பூ
பந்தலிலே பாவக்கா
தொங்குது பார் ஏலக்கா
பையன் வருவான் பாத்துக்கோ
பணங் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்கு பையிலே போட்டுக்கோ
*வீராம் பட்டணம் போகலாம்
வெள்ள இட்டிலி வாங்கலாம்
சவுக்குத் தோப்பு போகலாம்
சமைத்து வச்சுத் தின்னலாம்
புளிய மரத்துப் போகலாம்
புளியங்கொட்டை பொறுக்கலாம்
பனை மரத்துக்குப் போகலாம்
பல்லாங்குழி ஆடலாம்

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025

பொங்கலோ பொங்கல் சிறுவர் பாடல் | Pongal Padalgal Tamil Lyrics:

பொழுது புலர்ந்தது தை மாசம்
பொங்கல் கமழ்ந்தது நெய்வாசம்
தொழுது மகிழ்ந்தது சேய் நேசம்
தொடர்ந்து வளர்ந்தது தாய்ப்பாசம்!
கழனியில் விளைந்தது காய்கனிகள்
கணிசமாய் மகசூல் நெல்மணிகள்
உழுது விதைத்தது நம் பணிகள்
உடுத்தி மகிழ்வோம் துணிமணிகள்!
கதிரவன் திசையினில் பொங்கலிட்டோம்
களிப்புடன் போற்றியே குலவை இட்டோம்
புதியதாய் வாசலில் கோலமிட்டோம்
பொங்கலும் வைத்து நாம் வணங்கி விட்டோம்!
மஞ்சளும் இஞ்சியும் கரும்புடனே
மல்லிகை முல்லையும் அரும்புடனே
கொஞ்சின கிளிகளும் குயிலுடனே
கூவின கோழிகள் மகிழ்வுடனே!
சென்றது போகியும் முந்திய நாள்
செழித்திடும் பொங்கலும் தை முதல் நாள்
கன்றுடன் மாட்டுப் பொங்கல் மறுநாள்
காணும் பொங்கலும் இதைத் தொடர்ந்திடும் நாள்!
வள்ளுவர் திருநாள் உழவரின் நாள்
வரிசையாய் வந்திடும் பண்டிகை நாள்
பள்ளிகள் முழுவதும் விடுமுறை நாள்
பல்லாண்டு காலமாய் நம் திருநாள்!

Pongal Padal in Tamil: 

வந்தாச்சு பொங்கல்
வாயெல்லாம் இனிக்க…..
வந்தாச்சு தைத் திங்கள்
வாழ்வெல்லாம் செழிக்க …
வந்தாச்சு பொங்கல்
வாழ்த்து நாமும் உரைக்க ..

ஹே மார்கழி மாசம் உதிர்ந்து போக
தையும் பூத்தாச்சு…
மதங்கள் கடந்து தமிழன் மகிழ
பொங்கலும் வந்தாச்சு…
மார்கழி மாசம் உதிர்ந்து போக
தையும் பூத்தாச்சு…
மதங்கள் கடந்து தமிழன் மகிழ
பொங்கலும் வந்தாச்சு…

ஹே உழவர்தன்னை வணங்கும் நாளாம்…
உணவுக்கான அறுவடை நாளாம்..
உழவர்தன்னை வணங்கும் நாளாம்…
உணவுக்கான அறுவடை நாளாம்..
உள்ளம் எல்லாம் மகிழும் நாளாம்…

மார்கழி மாசம் உதிர்ந்து போக
தையும் பூத்தாச்சு…
மதங்கள் கடந்து தமிழன் மகிழ
பொங்கலும் வந்தாச்சு…

தமிழே உலகத்தின் மூத்த மொழி ..
முக்கனி சுவை கொண்ட மொழி …
தமிழனுக்கென்று ஒரு நாளாம் ..
பொங்கல் தமிழர் திருநாளாம்..

புத்தரிசி எடுத்து
வெல்லமதை போட்டு
புத்தடுப்பில் பொங்க வைப்போம் …
ஹா
பாலும் நெய்யும் சேர்த்து
பக்குவமா எடுத்து
நாவில்சுவை தங்க வைப்போம்…

ஹே..பொங்கலோ பொங்கல்
சொல்லத்தான் வேணும்….
கரும்பு கடிச்சு
மெல்லத்தான் தோணும்….

பொங்கலோ பொங்கல்
சொல்லத்தான் வேணும்….
கரும்பு கடிச்சு
மெல்லத்தான் தோணும்….
வாழ்த்து அதனால்
சொல்லுவோம் நாமும் …

மார்கழி மாசம் உதிர்ந்து போக
தையும் பூத்தாச்சு…
மதங்கள் கடந்து தமிழன் மகிழ
பொங்கலும் வந்தாச்சு…

ஹே ..காளைகளை பிடிக்க…
வீரம்தனை படிக்க…
சல்லிக்கட்டு இங்க இருக்கு ..
ஹே..உழவரைப் போற்றும்
நல்ல தினம் இதுபோல்
உலகத்தில் எங்க இருக்கு??? ..

ஹே..வள்ளுவர் தினம் இருக்குது பாரு
வாழும் முறைதனை கூறுது கேளு..
மதங்கள் சாதி பாராமல் கூடு..
பெருமையானது தமிழன் பண்பாடு
அதையும் நீதான் வாழ்த்திப் பாடு..

ஹே மார்கழி மாசம் உதிர்ந்து போக
தையும் பூத்தாச்சு…
மதங்கள் கடந்து தமிழன் மகிழ
பொங்கலும் வந்தாச்சு…

ஹே உழவர்தன்னை வணங்கும் நாளாம்…
உணவுக்கான அறுவடை நாளாம்..
உழவர்தன்னை வணங்கும் நாளாம்…
உணவுக்கான அறுவடை நாளாம்..
உள்ளமெல்லாம் மகிழும் நாளாம்…

மார்கழி மாசம் உதிர்ந்து போக
தையும் பூத்தாச்சு…
மதங்கள் கடந்து தமிழன் மகிழ
பொங்கலும் வந்தாச்சு…
பொங்கலும் வந்தாச்சு…
பொங்கலும் வந்தாச்சு…

பொங்கல் வாழ்த்து கவிதைகள்..

அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.! 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement