Pongal Patriya 20 Varigal In Tamil
இன்றைய பதிவில் பொங்கல் திருநாள் பற்றிய 20 வரிகள் ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். இந்த திருநாள் அன்று அனைவரது வீட்டிலும் அந்த அறுவடையில் கிடைத்த புதிய அரிசியை சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். இந்த பொங்கல் அன்று கிராமங்களில் வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். சரி இந்த பதிவில் பொங்கல் திருநாள் பற்றிய 20 வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க….
பொங்கல் திருநாள் பற்றிய 20 வரிகள்:
- பொங்கல் என்பது தமிழர்களின் மிக முக்கியமான அறுவடை பண்டிகை
- தமிழரை போற்றும் நன்னாள், உழவரை போற்றும் பொன்னாள்.
- இது மங்களகரமான தை மாதத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.
- உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
- தமிழ்நாட்டில் வெகு விமர்ச்சியாக 04 நாட்கள் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகை ஆகும்.
- பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. இரண்டாம் நாள் தைப்பொங்கல். மூன்றாம் நாள் மாட்டு பொங்கல். நான்காம் நாள் காணும் பொங்கல்..
- விவசாயிகள் தங்கள் நன்றியை நிலம், சூரியன், பசு போன்றவற்றிக்கு செலுத்துகின்றன.
- முதல் நாள் போகிப் பண்டிகை பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
- இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தேவை இல்லாத பொருட்கள் அப்பிரபடுத்தப்பட்டு வீட்டினை சுத்தம் சேர்வார்கள்.
- இரண்டாம் நாளான தை பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் செய்து அதனை முதலில் கதிரவனுக்கு படைப்பார்கள். பின் குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.
- மூன்றாம் நாள் மாட்டு பொங்கல்: உழவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் திருநாள் ஆகும்.
- அன்றைய நாளில் மாடுகளை கட்டும் தொழுவதை சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அந்த தொழுவத்திலேயே பொங்கல் செய்து கொண்டாடுவார்கள்.
- நான்காம் நாள் காணும் பொங்கல்: இந்த பண்டிகை அன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
- உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியார் கூற்றுப்படி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட வேண்டும்.
- உழவன் இயற்கைக்கும், நாம் உழவனாக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாளே பொங்கல் திருநாள்.
- தமிழர் தம் மண்ணின் பெருமைக்கும் அவர்தம் மரபுக்கும் புகழ் சேர்க்கும் அற்புத திருநாள் இது.
- பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.
- ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டு, பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள்.
- விவசாயிகள் அறுவடை செய்த புதிய அரிசியை கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்துவிடுகின்றன.
பொங்கல் திருநாள் கட்டுரை | Pongal Thirunal Katturai in Tamil | பொங்கல் விழா கட்டுரை
| இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |










