பொங்கல் பண்டிகை வழிபாடும் முறை | Pongal valipadu
தமிழரின் முக்கிய தினமாக விளங்கும் தைத்திருநாளான, பொங்கல் வருகின்ற ஜனவரி 15 கொண்டாடப்படுகிறது. இதனை வட மாநிலத்தில் மகர சங்கராந்தி என்று கொண்டாடுகின்றன. இந்த தைத்திருநாளானது தமிழகத்தில் நான்கு நாட்கள் மிகவும் விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த தினம் விவசாயம் செழிக்கவும், வசதி வாய்ப்புகள் பெருகவும் தமிழர்கள் தொன்று தொட்டு சூரிய பகவானை வழிபட்டு வரும் ஒரு முக்கிய விழாவாக இவ்விழா அமைய பெற்றுள்ளது.
சரி விமர்ச்சியாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாளை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்று இன்றிய பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க. நிறைய பேர் புதிதாக திருமணம் ஆனவர்களாக இருப்பீர்கள், அவர்கள் தனியாக இந்த பொங்கலை கொண்டாடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது என்றால். இந்த பொங்கல் திருநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று தெரிந்திருக்காது, அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் பொங்கல் திருநாளை வழிபாடும் முறையை பற்றி பதிவு செய்துள்ளோம். அதனை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
பொங்கல் வைக்க நல்ல நேரம் 2024 முழு விவரம் இதோ..!
போகி:
பழையன் கழித்தல் புதியன புகுதல் என்று ஒரு பழமொழியே இருக்கிறது. அந்த வருடத்தில் நடந்த பழைய சம்பவங்கள், வேண்டாத துன்பங்கள் அதையெல்லாம் மனதில் இருந்து கழித்துவிட்டு, போகி அன்று நமது வீட்டில் தேவையில்லாத பொருட்கள், துணிகள் இருக்கும் அதனை எரித்திவிட்டு அதனுடன் நமது மனதில் இருக்கும் பழைய கசமான விஷயங்களையும் சேர்த்து எரித்துவிட்டு, அதனை மனதில் ஏற்றுக்கொள்ளாமல் மறந்துவிட்டு, இந்த புதிய வருடத்தில் புதிய மனிதனாக காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை உணர்த்துவது தான் இந்த போகி பண்டிகை.
போகி என்கின்ற வாரத்தை எப்படி வந்தது என்றால் பழையன போக்கு என்பது தான் அதனுடைய பொருள், போக்கு என்கின்ற வார்த்தை கால போக்கில் போகி என்று மாறிவிட்டது. இந்த போகி பண்டிகை அன்று சிலரது வீடுகளில் நான்கு இலைகளை கொண்டு காப்பு காட்டுவார்கள்.
இந்த காப்பு எதற்கு காட்டப்படுகிறது என்றால் இந்த புதிய வருடத்தில் எந்த ஒரு தீய சக்தியும், எண்ணமும் நம்மை அண்டாமல் இருப்பதற்கு இந்த காப்பு காட்டப்படுகிறது. பூளைப்பூ, மகிழம்பூ, வேப்பிலை மற்றும் மாவிலை இந்த நான்கு இலைகளையும் சேர்த்து வைத்து கட்டி அதனை வீடுகளின் வாசல் மற்றும் நான்கு மூலையிலும் கட்டிவிடுவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தைப் பொங்கல் பண்டிகையின் போது நாம் சமைக்க வேண்டிய உணவுகள்
தைப்பொங்கல் – Pongal valipadu:
இரண்டாவது நாள் தைப்பொங்கல் இந்த நாள் அன்று உங்கள் வீட்டின் நடு வாசலில் தாராளமாக இடம் வசதி இருக்கிறது என்றால். அங்கு இரண்டு அடுப்பிகளை செட் செய்து அந்த அடுப்பிற்கு மாக்கோலம் அல்லது அரிசி மாவில் கோலம் இடவும். பிறகு அந்த அடுப்பிற்கு மஞ்சள் குங்குமம் இடவேண்டும். இவ்வாறு இடம் வசதி இல்லை என்றல் ஒன்றும் பிரச்சனை இல்லை உங்கள் சமையல் அறையிலேயே பொங்கல் வைக்கலாம்.
ஆக சமையல் அறையில் இருக்கும் அடுப்பை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இடவேண்டும். பிறகு அடுப்பில் மண் பானையோ, பித்தைளை பானையோ எதுவாக இருந்தாலும் சரி அவற்றில் இரண்டு பானைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த பானைக்கு விபூதி பட்டை போட்டு மஞ்சள் குங்குமம் வைத்து. பானையின் கழுத்து பகுதியில் பஞ்சால் கொத்து கட்டிவிடவும்.
பிறகு பசும்பால் மற்றும் தண்ணீர் கலந்து பொங்கல் பணியில் ஊற்றி பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் வைப்பதற்கு முன்பு நல்ல நேரம் பார்த்து வீட்டில் விளக்கு ஏற்றிவிட்டு பொங்கல் வைக்க வேண்டும்.
வெள்ளை பொங்கல் மற்றும் சக்கரைப்பொங்கல் இரண்டும் வைக்க வேண்டும். வெள்ளை பொங்கலுக்கு குழம்பாக அனைத்து வகை காய்கறிகளிலும் சேர்த்து கதம்ப சாம்பார் வைக்க வேண்டும்.. அதன் பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தால் பால் பாயசம், வடை, சைடிஸ் இவையெல்லாம் செய்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 21 வகை காய்கறிகள் சேர்த்து பொங்கல் குழம்பு செய்முறை..!
இந்த விஷயங்களை எல்லாம் செய்வதற்கு முன்பு நீங்கள் காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு, புது ஆடைகளை அணிந்த பிறகு மற்ற பணிகளை செய்ய ஆரம்பிக்கவும்.
பொங்கல் வைத்த பிறகு, பூஜை அறையில் வாழை இல்லை போட்டு பொங்கல் மற்றும் சமைத்த உணவுகள், பழங்கள் இவையெல்லாம் வைத்து படையல் போட வேண்டும். பின் சூரிய பகவானுக்கு கற்பூரம், மற்றும் சாம்பிராணி கட்டிய பிறகு வீட்டில் இருக்கும் தெய்வங்களுக்கு கற்பூரம் மற்றும் சாம்பிராணி காட்ட வேண்டும். பிறகு நீர்விலாவி அனைவரும் சாப்பிடலாம்.
மாட்டு பொங்கல்:
மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூச்சி, மாடுகளுக்கு வண்ண வண்ண நிறங்களில் மாலை போட்டு அலங்கரிப்பார்கள். பிறகு மாடுகளுக்கென்று தனியாக அன்றைய நாள் பொங்கல் வைத்து, படையல் போட்டு சாமி கூப்பிட்டு. அந்த மாடுகளுக்கு பொங்கல் கொடுப்பார்கள். பிறகு அன்றைய நாள் மாடுகளை வயலாக்களில் மேயவிடுவார்களாம். இன்னும் நிறைய விஷயங்கள் செய்வாங்க, எனக்கு தெரிந்த விடயங்களை உங்களுடன் நான் பகிர்ந்துள்ளேன்.
இது தவிர்த்து பெரும்பாலான வீடுகளில் மாட்டு பொங்கல் அன்று வீட்டு சாமி கூப்பிடுவது வழக்கம். இறைச்சி உணவுகளை சமைத்து, நமது முன்னோர்களுக்கு படைப்பார்கள்.
காணும் பொங்கல்:
காணும் பொங்கல் அன்று பெரும்பாலான வீடுகளில் வெரைட்டி உணவுகளை சமைத்து அதனை ஆற்றங்கரை, ஏறி, கடல் இது போன்று ஏதாவது ஒரு இடத்திற்கு எடுத்து சென்று தங்கள் நண்பர்களை, உறவினர்களுடன் பேசி மகிழ்ந்து, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்து. பிறகு அங்கேயே அமர்ந்து உணவிருந்திய பிறகு வீடு திரும்புவார்கள்.
இவ்வாறு தான் இந்த நான்கு நாட்களும் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது பலவிதமான வீர விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன ஜல்லிக்கட்டு, மாட்டு பந்தயம், பானை உடைத்தல், கபடி இது போன்ற விளையாடு போட்டிகளும் நடைபெறும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கலுக்காக சில பொங்கல் பானை கோலங்கள்!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> | பொதுநலம்.com |