• முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Search
  • Contact us
  • Terms of Services
  • Privacy Policy
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
தமிழ்

போஸ்ட் ஆபீஸ் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள் | Post Office schemes in Tamil

February 14, 2022
Share on Facebook
Tweet on Twitter
Post Office schemes in tamil

தபால் துறை சேமிப்பு திட்டங்கள் | Post Office Savings Schemes in Tamil 2021

Post office savings schemes in tamil:- வணக்கம் நண்பர்களே. போஸ்ட் ஆபிஸ்/அஞ்சல் துறை சேமிப்பு திட்டத்தில் உள்ள ஒன்பது அற்புதமான சேமிப்பு திட்டங்கள் இங்கு நாம் தெரிந்து கொள்வோம். இந்திய தபால் துறை, வங்கிகளை போன்று, பொது மக்களுக்கு பலவகையான சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது.

அதாவது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் பொது மக்களின் பயனுக்கு வழங்கி வருகின்றன.

அதிலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் (PPF), மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் 👉 மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

 

சரி இப்பொழுது தபால் நிலயத்தில் (Post office savings scheme in tamil 2021) வழங்கப்படும் ஒன்பது வகையான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம் வாங்க.

தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு / Post Office Savings Account:

Post Office schemes

தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் தபால் அலுவலகம் 4 சதவீதம் வட்டியினை தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும்.

சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.

மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.

ஐந்து வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் / 5-Year Post Office Recurring Deposit Account (RD):

தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5.8​% சதவீதம் வட்டி விகிதம் அளிக்கிறது.

குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் எனவும் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடர தபால் துறை அனுமதி அளிக்கிறது.

இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த சேமிப்பு திட்டத்திலும் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.

இதையும் படியுங்கள் 👉 செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!

போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கு:

Post Office schemes

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பது எப்படி? தபால் அலுவலக டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

தற்போது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் எப்படி அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம்.

  1. வருட கணக்கு: 5.5%
  2. வருட கணக்கு: 5.5%
  3. வருட கணக்கு: 5.5%
  4. வருட கணக்கு: 6.7​%

அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80C கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டத்திலும் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.

newஅஞ்சல் துறையின் தொடர் வைப்பு நிதி திட்டம்..! Recurring Deposit In Post Office..!

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு / Post Office Monthly Income Scheme Account (MIS):

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்:- தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 6​.6​% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.

ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம்.

ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் 👉தபால் அலுவலக மாத வருமான திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் / Senior Citizen Savings Scheme (SCSS):-

55 வயது முதல் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் சேமிப்பு கணக்கை துவங்கலாம். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கினை குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு காலம் 5 வருடம். ஆண்டுக்கு 7.4% வட்டிஅளிக்கிறது.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் / 15 year Public Provident Fund Account (PPF)

PPF என்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் தொகையாக ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக அல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.

பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் முடிவடைந்த பிறகு மேலும் சேமிப்பு கணக்கை தொடர வேண்டும் என்று விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டித்து கொள்ளலாம்.

இந்திய தபால் துறையின் டைம் டெபாசிட் திட்டம்..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு வட்டி ரூ.39,406 கிடைக்கும்..!

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் / National Savings Certificates (NSC):- 

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 6.8% வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இந்த திட்டத்தில் தாங்கள் குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

உதாரணத்திக்கு இன்று 1000/- ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 1389.49 ரூபாய் கிடைக்கும்.  வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம்  / Kisan Vikas Patra (KVP)

கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுக்கு 6.9% வட்டி விகித லாபத்தினை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 124 மாதம் அதாவது 10 வருடம் 4 மாதம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்று ஏதும் இல்லை. பெரியவர்கள் அல்லது மைனர் என யார் பெயரில் வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தில்  சேர்ந்துக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் தாங்கள் குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..! KVP Post Office Scheme..! 1 லட்சம் முதலீட்டிற்கு..! 1 லட்சம் வட்டி..!

Sukanya Samriddhi Accounts:- 

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்த செல்வ மகள் திட்டம் இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும்.

இந்தத் திட்டத்தில் தற்போது  7.6​​% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com
  • TAGS
  • 5-Year Post Office Recurring Deposit Account
  • Post Office Monthly Income Scheme Account
  • Post Office Savings Account
  • post office savings scheme in tamil 2021
  • post office scheme in tamil
  • Post Office schemes in Tamil
  • தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு
  • தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள்
  • தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு
  • தபால் துறை சேமிப்பு திட்டங்கள்
  • போஸ்ட் ஆபீஸ் சேமிப்பது எப்படி
SHARE
Facebook
Twitter
  • tweet
Sathya Priya

RELATED ARTICLESMORE FROM AUTHOR

Planets Names Tamil and English

கோள்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் | Planets Names Tamil and English

Oru Eluthu Oru Mozhi

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் | Oru Eluthu Oru Mozhi

Selfie Meaning in Tamil

செல்ஃபி தமிழ் அர்த்தம் | Selfie Meaning in Tamil

Emoji Meaning in Tamil

இமோஜி தமிழ் மீனிங் | Emoji Meaning in Tamil

Paruppu Price List in Tamil 2022

இன்றைய பருப்பு விலை நிலவரம் 2022 | Paruppu Price List in Tamil 2022

NECC Egg Price Today

நாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..! NECC Egg Rate Today..!

விளம்பரம்




புதிய செய்திகள்

  • தமிழ்நாட்டின் ஆளுநர் பெயர் என்ன?
  • பப்பாளி சாப்பிட்டால் எத்தனை நாட்களில் கரு கலையும் | karu kalaippu seivathu eppadi
  • அதிக மைலேஜ் தரும் பைக் | Best Mileage Bike in Tamil
  • புனித ஜார்ஜ் கோட்டை எந்த ஆண்டு கட்டப்பட்டது?
  • கோள்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் | Planets Names Tamil and English
  • இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை | Indiavin Valarchi Katturai in Tamil
  • ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் | Oru Eluthu Oru Mozhi
  • கம்பெனி இண்டர்வில் உங்களை பற்றி சொல்வது எப்படி? | Self Introduction Interview in Tamil
  • உலகின் மிகப் பெரிய கண்டம்?
  • மீதமான இட்லி இருக்கா அப்ப இந்த இட்லி 65 செஞ்சு பாருங்க..!
  • ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை | Honda Activa 6g Price
  • இன்றைய நட்சத்திரம் என்ன?

விளம்பரம்




Indraya Rasi Palan 2021
Indraya thangam villai
Tamil Calendar 2021
Indraya Nilavaram
வேலைவாய்ப்பு செய்திகள்

Disclaimer

Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com

POPULAR POSTS

marigold cultivation

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli...

January 1, 2022
bay leaf benefits in tamil

பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..!

April 2, 2021
வெண்ணெய் பயன்கள்

பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...

February 4, 2022

POPULAR CATEGORY

  • தமிழ்656
  • ஆரோக்கியம்574
  • ஆன்மிகம்342
  • சமையல் குறிப்பு286
  • GK in Tamil229
  • வேலைவாய்ப்பு227
  • அழகு குறிப்புகள்226
  • குழந்தை நலன்206
  • வியாபாரம்176
©