Powers and Functions of Prime Minister of India in Tamil
பிரதமந்திரி என்பவரை அரசாங்கத்தின் தலைவர் அதாவது (செயலளவுத் தலைவர்) ஆவர். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோதி பதவியில் உள்ளார் சரி இந்த பதிவில் பிரதமரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பற்றி படித்தறியலாம் வாங்க.
பிரதமரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
- பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
- பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
- அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
- அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
- பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்.
- பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
- முக்கிய இராணுவ விடயங்கள்.
- பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
- மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
- முக்கிய பிரச்சனைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.
- பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |