Proverbs in English and Tamil Meaning
பழமொழிகள் என்றாலே பள்ளி பருவம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் அப்போது தான் பழமொழிகளை படித்திருப்போம். தமிழில் கொடுத்து ஆங்கிலத்தில் எழுத சொல்வார்கள். இல்லையென்றால் ஆங்கிலத்தில் கொடுத்து தமிழில் எழுத சொல்வார்கள். அதன் பிறகு பார்த்தால் நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகள் நாம் ஏதாவது ஒரு வேலை செய்தால் அதனை செய்ய முடியாது என்று சொன்னாலோ அல்லது தவறாக செய்தாலோ அதனை சுட்டி காட்டுவதற்கு பழமொழிகள் கூறி தான் அதனை கூறுவார்கள். அப்படி அவர்கள் பழமொழி கூறும் போது அதற்கான அர்த்தம் என்னவென்று தெரியாது, அவர்கள் ஏதவாது சொல்லட்டும் என்று சிலர் நினைப்பார்கள். சில பேர் அதற்கான அர்த்தத்தை தேடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் தமிழ் பழமொழிகள் மற்றும் அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
Proverbs in English and Tamil Meaning:
தமிழ் | ஆங்கிலம் |
வீட்டையும் நிலத்தையும் விடக் கற்பது மேல் , கல்வியே சிறந்த செல்வம். | Learning is better than house and land |
கற்பதற்கு வயது கிடையாது | It is never too late to learn |
கற்றல் மனத்தைத் தூய்மைப்படுத்தி உயர்த்தி விடும். | Learning refines and elevates the mind |
கேள்விகள் கேட்பவனே படிப்பாளி ஆகிறான் | A man becomes learned by asking questions |
தோற்பதால் கற்கிறோம் | One learns by failing |
படிப்பாளி எப்போதும் தன்னுள்ளே செல்வத்தைக் குவிப்பான் | The learned man has always riches in himself |
மற்றவர் அனுபவத்தில் கற்பது நன்று | It is good to learn at other men cost |
கல் மனம் போல் பொல்லாப்பில்லை கற்ற மனம்போல் நற்பேறில்லை | Nothing so much worth as a mind well educated |
கல்வியால் பரவும் நாகரிகம் | Education is the transmission of civilization |
கற்கையில் கசப்பு கற்றபின் இனிப்பு | Knowledge has bitter roots but sweet fruits |
Proverbs in English and Tamil Meaning for Students
தமிழ் | ஆங்கிலம் |
தீய பண்பைத் திருத்திடும் கல்வி நல்ல பண்பைப் பொலிவுறச் செய்யுமம் | Education polishes good nature and corrects bad ones |
கடவுள் விரும்பியபடியே அனைவரும் இருப்பர் (ii) கடவுள் விருப்பப்படியே இங்கு மானிட வாழ்வு. | All must be as God wills |
சிறு தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிடடால் பெறுந்தவறுகளைத் தவிர்க்க முடியாது. | He that corrects not small faults will not control great ones |
தன்னைக் கண்டித்துத் கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான். | Happy is he that chastens himself |
முரட்டுக் குதிரைக்கு வலுத்த கடிவாளம். | A boisterous horse must have a rough bridle |
உண்மை வெற்றி உழைப்பிற்கே. | The true success is to labour |
நேரத்தே எழுந்து காலத்தே உண்டு நேரத்தே உறங்கினால் நூறாண்டு வாழலாம். | To rise at five dine at nine sup at five go to bed a nine makes a man live to ninety nine |
நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான் | He who masticates well lives up to a hundred full |
அனுபவமே அறிவின் தாய். | Experience is the mother of wisdom |
அனுபவம் பிழைகளைச் செய்தபின் மெதுவாகக் கற்பிக்கிறது. | Experience teaches slowly and at the cost of mistakes |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |