பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ளவும்..

Advertisement

Proverbs in English and Tamil

பழமொழி என்றால் ஞாபகத்திற்கு வருவது தாத்தா, பாட்டிகள் தான். எப்படி என்று நினைக்கிறீர்களா.! நாம் ஏதவாது ஒரு செயல் செய்யும் போது சாதரணமாக ஒரு பழமொழியை சொல்லி விடுவார்கள், நாமும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சிரித்து கொண்டே கடந்து விடுவோம். அவர்கள் சொல்லும் பழமொழிகளில் சில சிரிப்பு வருவது போல் இருக்கும், சிலவை சிந்திக்க வைப்பது போல் இருக்கும். ஆனால் அதில் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கும். இந்த பதிவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் சில பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்:

தமிழ் பழமொழி  ஆங்கிலத்தில் பழமொழி 
ஊரோடு ஒத்து வாழ் Do in Rome as Romans do
பழிக்கு பழி Tit for Tat
நுணலும் தன் வாயால் கெடும் A closed mouth catches no flies
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். The face is the index of the mind
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் The mills of God grind slow but sure
எலி வளையானாலும் தனி வலையே சிறந்தது East or West, Home is the best
கல்வி கரையில் கற்பவர் நாள் சில Art is long and life is short
மின்னுவதெல்லாம் பொன்னல்ல All that glitters are not gold
இளங்கன்று பயமறியாது A young calf knows no fear

பேராசை பெரு நட்டம் Covert all, lose all
குரைக்கிற நாய் கடிக்காது Barking dogs seldom bite
புயலுக்குப் பின்னே அமைதி After a storm cometh a calm
ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள் A bad workman blames his tools
புலிக்குப் பிறந்தது பூனையாகாது A wild goose never laid a tame egg
அகம்பாவம் அழிவை தரும் Pride comes before fall.
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும் A guilty conscience needs no accuser
அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும் A honey tongue and a heart of gall
உள்ளதை உள்ளவாறு சொல் Call a spade a spade
ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது. A Leopard Never Changes Its Spots

Palamoli in Tamil and English

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே Coming events cast their shadow before.
எறும்பு ஊரக் கல்லும் தேயும். Constant dripping wears away a stone
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் As you sow, So you reap
வெறுங்கை முழம்போடுமா? Bare words buy no barley
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு Be just before you are generous
இனம் இனத்தைச் சேரும் Birds of a feather flock together
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும Lood is thicker than water
தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் Charity begins at home
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் Diamond cuts diamond
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு Too much of anything is good for nothing

 

பொது அறிவு வினா விடைகள்

யானைக்கும் அடி சறுக்கும் Good homer sometime nods
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் A cat may look at a king
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு Every ass loves his bray
விருந்தும். மருந்தும் மூன்று நாளைக்கு தான் Fish and guests stick in three days
பழகப் பழகப் பாலும் புளிக்கும் Familiarity breds contempt
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? First deserve, then desire
எண்ணித் துணிக கருமம் Think before you act
பதறிய காரியம் சிதறும் Haste makes waste
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Health is wealth
வரும் முன் காப்பதே சிறந்தது Prevention is better than cure

 

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம்:

 

கத்தி முனையைவிட பேனாமுனை வலிமையானது. The pen is mightier than sword
அடியாத மாடு பணியாது Spare the rod and spoil the child
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் Laughter is the best medicine
நெருப்பின்றி புகையாது No smoke without fire
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் The old fox is caught at last
செய்யும் தொழிலே தெய்வம் Work is worship
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு United we stand, divided we fall
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் A friend in need is a friend indeed
நிழலின் அருமை வெயிலில் தெரியும் The worth of shade is only known when the sun is beating down hot
பாம்பின் கால் பாம்பறியும் Set a thief to catch a thief

 

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் PDF

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement