தமிழ் வழி கல்வி சான்றிதழ் கோரி விண்ணப்பம்!

Advertisement

தமிழ் வழி கல்வி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்!

PSTM Certificate அதாவது தமிழ் வழி கல்வி சான்றிதழ், இந்த PSTM என்றால் Person Studied in Tamil Medium என்பதாகும் இது யாருக்கெல்லாம் தேவைப்படும் என்றால் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தான. இப்போதெல்லாம் அரசாங்கம் பல விதமான சலுகைகளை தமிழ் வழி கல்வி படித்த மாணவர்களுக்கு வழங்குகிறது. நிறைய விதமான அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்த PSTM Certificate தேவைப்படுகிறது. இந்த Certificate இருந்தால் உங்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.

PSTM Certificate Request Letter Format in Tamil

உங்களுக்கு எப்படி தமிழ் வழி கல்வி சான்றிதழ் கோரி விண்ணப்பம் எழுதுவது என்று தெரியவில்லை என்றாள் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும்.

தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ் | PSTM Certificate in Tamil

PSTM Certificate Letter Writing in Tamil

தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்குமாறு தலைமை ஆசிரியருக்கு கடிதம்

அனுப்புநர்:

உங்கள் பெயர் (அனுஷா)

முகவரி (3/10, தபால் நிலையம் அருகில்),

ஊர் பெயர் (ஈரோடு)

பெறுநர்:

தலைமை ஆசிரியர் அவர்கள்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

ஈரோடு.

பொருள்: தமிழ் வழி கல்வி சான்றிதழ் கோரி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம் ஐயா/ அம்மா நான் தங்கள் பள்ளியில் 2022-23-ஆம் ஆண்டுவரை என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பை முடித்தேன். நான் தமிழ்வழி கல்வியில் படித்ததால் எனது வேலைக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று தேவைப்படுகிறது, இந்த சான்று எனக்கு கிடைத்தால் என்னுடைய வேலைக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். ஆகையால் எனக்கு அந்த சான்றிதழ் வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.

இப்படிக்கு

(கையொப்பம்)

பெயர்: அனுஷா

தேதி: 18.02.2024

தமிழ் வழி கல்வி சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்:

நீங்கள் PSTM Certificate Request Letter Format in Tamil-லுடன் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணைக்கவேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று வேண்டி விண்ணப்பம் கொடுத்தவுடன் உங்களுக்கு சான்றிதழ் கிடைத்துவிடும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement