புலியை கனவில் கண்டால் என்ன பலன்..!

Advertisement

புலி கனவில் வந்தால் என்ன பலன் – Kanavil Puli Vanthal Palan in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றிய கனவு பலனில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் புலி பற்றிய கனவு தான். அதாவது புலி கனவில் வந்தால் என்ன பலன் என்பது குறித்த தகவலை தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக புலிகளை கனவில் காண்பது பிறர் கடுமையாக நடந்துகொள்ளுதல், பிறரை குறித்த பயம், பிறரிடம் உணர்ச்சிவசப்படுதல், நமது தைரியம் மற்றும் நமது மனபலம் பற்றியும் இந்த கனவு குறிக்கிறது. சரி வாங்க புலி கனவில் கண்டால் என்ன பலன் என்று இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

புலியை கனவில் கண்டால் என்ன பலன் – Kanavil Puli Vanthal:Puli

கனவு காண்பவர் இறந்த புலியை கனவில் காணப்பது போல் கண்டால் அல்லது புலியை கொள்வது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இது ஒரு கெட்ட காலமாக தற்பொழுது தெரிந்தாலும், எல்லா பிரச்சனைகளும் விரைவில் மறைந்துபோகும் என்பதையும் இந்த கனவு உங்களுக்கு உணர்த்துகிறது. ஆக பிரச்சனைகளை தீர்க்க இதுவே சரியான நேரமாக இருப்பதினால் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வரவும் உங்களை அறிவுறுத்துகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா..?

புலியை கனவு காண்பவர் தன் வளர்ப்பு பிராணியாக கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு இது ஒரு அறிவுறுத்தும் கனவாக வரவிருக்கும் நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்ளவும், பிறருக்கு தொந்தரவு தராத வகையில் தன் காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறது.

கனவில் பெண் புலி தன் குட்டி புலியை பாதுகாப்பது போல் கனவு கண்டால், கனவு காண்பவருக்கு வரவிருக்கும் பிரச்சனை. அதாவது அவர்களுடைய அன்புக்குரியவரை பாதுகாக்க வேண்டிய நிலை வரவிருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது. திருமணமாகியவராக இருந்தால் அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என கண்டறிந்து பாதுகாக்க இந்த கனவு அறிவுறுத்துகிறது.

சர்க்கஸில் உலா புலியை கனவில் காண்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இது ஒரு அறிவுறுத்தும் கனவாகும். அதாவது கனவு காண்பவருக்கு ஏதோ மறைமுகமாக ஏதோ ஒரு பாத்து வரவிருப்பதையும், அதற்கு நெருங்கிய நட்புகள் காரணமாக இருக்கலாம் எனவும், வேலை செய்பவராக இருந்தால் உடன் பணிபுரிவர்களால் வரவிருக்கும் ஆபத்துகளை பற்றியும் இந்த கனவு குறிக்கிறது. ஆக உங்களை கவனமாக இருக்க இந்த கனவு அறிவுறுத்துகிறது.

புலி கனவு கணபவரை தாக்குவது போல் கனவு கண்டால், கனவு கணபவருக்கு வாழ்வில் ஒரு பாதுகாப்பற்ற நிலை வரவிருப்பதையும், பிரச்சனைகள் வாழ்வில் வர தொடங்க இருப்பதை முன்னறிவிக்கும் கனவாக இது இருக்கும்.

கருப்புநிற புலியை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு இது ஒரு நல்ல கனவாக நிறைய வழிகளில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கு அறிந்துகொள்ளவிருப்பதை மற்றும் நல்ல ஆதாயம் கிடைப்ப இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

தூங்கிக்கொண்டிருக்கும் புலியை கனவில் கண்டால் உங்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை சவால் போல எதிர்நோக்கி அதை முறியடித்து நல்ல அமைதியான  வாழ்வு வாழவிருப்பதை குறிக்கிறது.

பெரிய புலியை கனவில் கண்டால் கனவு காண்பவர் நல்ல அறிவு முதிர்ச்சியுடன் யாரிடமும் தன்னுடைய மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் தன்னுடைய பிரச்சனைகளை தானே சமாளிப்பவராக இருக்கவிருப்பதையும் இந்த கனவு குறிக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
All Kanavu Palangal in Tamil

கனவில் புலியை பிடிப்பது போல் கண்டால் கனவு காண்பவரை மனம் வருத்தப்படும் படியாக பேசும் நபர் வாழ்வில் வெற்றி அடையமாட்டார் எனவும் எனவே கனவு கணபவருக்கு வாழ்வில் நல்ல தெய்வ பாதுகாப்பு வரவிருப்பதை குறிக்கிறது.

வெள்ளை நிற புழையை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு எது நல்லது என அறிய அறிவுறுத்தியும், தேவை இல்லாததை விஷயங்களை விட்டுவிடவும் இந்த கனவு உங்களுக்கு அறிவுறுத்துகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement