வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புனித வெள்ளி என்றால் என்ன ?

Updated On: March 27, 2026 4:29 PM
Follow Us:
புனித வெள்ளி
---Advertisement---
Advertisement

Good Friday 2026 In Tamil

நாம் அனைவரும் ஒவ்வொரு மதத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் நாம் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம். ரம்ஜான் பண்டிகைக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களிடம் நட்பு கொண்ட இஸ்லாமியத்தார்கள் பிரியாணி வழங்குவதுமுண்டு. அதுபோல் அவரவர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். ஆனால்  மக்கள் கொண்டாடப்படும் பண்டிகை எதற்கு என்ன காரணத்தால் கொண்டாடுகிறார்கள் என்ற வரலாறு தெரியாது. அதே போல் கிறித்தவர்கள் கொண்டாடப்படும் புனித வெள்ளி எந்த காரணத்தால் கொண்டாடுகிறார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

புனித வெள்ளி என்றால் என்ன ?

good friday

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டு உயிர் நீத்த நாள் அதனை நினைவு கூறும் நாளாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இது அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் சண்டேவுக்கு முதல் நாள் வரும் வெள்ளி கிழமை நடக்கிறது. இயேசு கிறிஸ்து கி.பி 33 ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இறந்தார். இதனை நினைவு கூறும் விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் இயேசு சிலுவையில் பட்ட துன்பங்களை நாம் நினைவு செய்து பார்க்க வேண்டும் என்பதே.

இயேசு கிறிஸ்து எப்படி இறந்தார் ?

இயேசுவின் அவர் சீடரான யூதாஸ் என்பவர் 30 வெள்ளி காசுகளுக்காக இயேசுவை  காட்டி கொடுத்தார். அவர் நிறைய நல்ல விஷயங்கள் எருசேலம் மக்களுக்கு செய்தார்.  இதனை விரும்பாத அந்நாட்டு அரசரால் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டார்.

கயபா என்ற தலைமை குருவிடம் இயேசுவை அழைத்து சென்றனர். இயேசு மீது பொய்யான குற்றங்களை சாற்றினை வழங்கினார்.  அவரை ரோம் மன்னரான பிலோத்துவிடம் இயேசுவை கொண்டு சென்றனர் அங்கு அவர் இயேசுவை விசாரித்து விட்டு அவர் மேல் எந்த தவறும் இல்லை என கூறினார். எனினும் அந்நாட்டு மக்கள் அதனை நம்பவில்லை. மக்கள் நம்பாததால் இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை வழங்கி இயேசுவை விடுதலை செய்து விடலாம் என பிலோத்து முடிவு எடுத்தார் .

ஆனாலும் மக்கள் விடுவதாயில்லை அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்றனர். மக்கள் பேச்சை எதிர்த்தால் பிரச்சனை வரும் என பயந்த பிலோத்து இயேசுவை சிலுவையில் அடைக்க முடிவெடுத்தார். அவர் தலையில் முள் கிரீடம் அணியப்பட்டது. பின் இயேசுவை கல்வாரி மலையில் சிலுவயில் அடைத்தனர்.

இயேசு சிலுவையில் அடை பட்ட அந்த தினம் வானம் மதிய நேரத்திலே இருண்டு காணப்பட்டுள்ளது. அதன் பின் இயேசு அறைப்பட்ட சிலுவையிலே 15 நாட்கள் வைக்கப்பட்டிருக்கிறார். அதன் பின் ஏப்ரல் 3 ஆம் தேதியன்று இறந்து விட்டார். அதன் மூன்றாம் நாளே அவர் உயிர் தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது.

அவர் துயர்விட்டு உயிர் விட்ட நாள் வெள்ளி கிழமை புனித வெள்ளியாகவும், உயிர் தெழுந்த மூன்றாம் நாள் ஞாயிறு  ஈஸ்ட்டர் சண்டே எனவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

புனித வெள்ளி வாழ்த்துக்கள் 2026

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now