புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி.?

Advertisement

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி.?

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் புறம்போக்கு நிலத்திற்கு எப்படி பட்டா வாங்குவது என்று தெரிந்து கொள்ளலாம். புறம் போக்கு நிலம் என்பது அரசுக்கு உரிமையுடையது. பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் ஆகும். அதாவது வேளாண்மை செய்ய முடியாத நிலங்கள், சாலைகள், நீர்நிலைகள் போன்றவை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றன. இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

புறம்போக்கு நிலத்தை பட்டா வாங்குவது எப்படி.?

 புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாம் என்று தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு தெரிவித்தது. அது எப்படி என்றால் புறம்போக்கு நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அந்த நிலத்தை சொந்தமாக்கி கொள்ளலாம்.  

அரசு புறம்போக்கு நிலங்களை இரண்டாக பிரிக்கலாம். அவை

ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke)

ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke)

ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke):

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்பது ஊரில் உள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை போன்றவை தான். இதில் கிராம நத்தம் என்பது மக்கள் வசிக்கின்ற அளவிற்கு மேடான பகுதியை தான் கிராம நத்தம் என்று கூறுவார்கள். இந்த நிலங்களில் பட்டவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம். பட்டா கொடுப்பது அரசின் முடிவு. அரசு பயன்பாட்டிற்கு என்று கருதினால் பட்டா தரமாட்டார்கள். 

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?

ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke):

ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்பது குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை தான் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு என்று கூறுகிறோம். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு, மயானம்,சாலை , காடுகள், வாய்க்கால் , தோப்பு , களம்,பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது. தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள் 
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?
அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement