புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா

Advertisement

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இதற்கு முக்கியமாக சொந்தமாக இடம் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அதில் வீடு கட்ட முடியும். இந்த நிலத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்றாக இருப்பது தான் புறம்போக்கு நிலம். இந்த புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா என்பது பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா என்று அறிந்து கொள்வோம் வாங்க..

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா:

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு

புறம்போக்கு நிலம் என்பதை அரசின் சொத்து என்று கூறலாம். பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர். அதாவது நம் நாட்டில் வேளாண்மை செய்யமுடியாத நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர்.

இந்த நிலங்களை அரசானது பொது நோக்கத்திற்காக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைப்பார்கள். இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் அதில் கட்டிடமோ அல்லது வேறு ஏதாவது கட்டுவதற்காக ஆக்கிரமித்து கொள்வார்கள்.

புறம்போக்கு நிலம் என்பதில் பல வகைகள் இருக்கிறது. இதில் நத்தம் என்பதில் மட்டும் தான் மக்கள் வாழ்வதற்காக அரசாங்கமே கொடுக்கும். இதற்கான ஆவணங்களும் சரியாக வைத்திருப்பது அவசியமானது. ஒருவர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றார் என்றால் அதற்கான ஆவணத்தை பெறலாம்.

புறம்போக்கு நிலம் என்றாலும் அதில் வகைகள் பல இருக்கிறது. இதில் நத்தம் மட்டுமே மக்கள் பயன்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் மற்ற புறம்போக்கு நிலங்களில் வீடி கட்ட கூடாது. ஏனென்றால் இந்த நிலமானது எப்போதும் வேண்டுமானாலும் அரசாங்கம் ஆக்கிரமித்து கொள்ளும். அதனால் இந்த நிலங்களில் ஒருபோதும் வீட்டை கட்டாதீர்கள்.

புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement