கியூ ஆர் கோட் என்றால் என்ன? – QR Code Meaning in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் பொதுவாக இந்த QR Code-ஐ பெட்ரோல் பங்குகளில் பணம் செலுத்தும் இடத்திலோ, கடைகளில் இருக்கும் பொருள்களிலோ, வாட்ஸ்அப், டெலெக்ராம் போன்றவற்றை கணினியில் ஓபன் செய்யும் போதோ, ஏதாவது App-ஐ பயன்படுத்தும் போதோ கண்டிப்பாக QR Code-ஐ பார்த்திருப்பீர்கள். இன்றிய பதிவில் நாம் QR Code என்றால் என்ன? அதன் பயன்களை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
QR Code என்றால் என்ன? – QR Code Meaning in Tamil:
மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது தான் QR கோட். இதனை நீங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளில் கூட பார்த்திருப்பீர்கள். இந்த QR Code-யில் நிறைய தகவல்கள் இருக்கும். ஆனால் அது நம் கண்களுக்கு தெரியாது. QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது. இவற்றில் உள்ள குறியீடுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சதுரங்களின் வரிசையைக் கொண்ட இயந்திரம் படிக்கக்கூடிய குறியீட்டில் இருக்கும்..
இந்த QR Code-யில் இணையதள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ் செய்திகள் போன்றவறை மறைக்குறியாக்கம் செய்யலாம்.
மறைக் குறியாக்கம் செய்யப் பட்ட தகவல்களைக் கொண்ட இப்படத்தினை இனையம் வழியே பகிரலாம் அல்லது அதனை அச்சிட்டு வன் பிரதியாகவும் (Hard Copy) பயன்படுத்தலாம்.
QR கோடை உருவாக்குவதற்கென மென்பொருள்களும் உள்ளன. அவற்றை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் மென்பொருள்கள் எதனையும் கணினியில் நிறுவாமலேயே ஆன்லைனிலும் QR கோடை உருவாக்கும் வசதியை பல இனைய தளங்கள் வழங்குகின்றன.
அவற்றின் மூலம் இலகுவாக உங்கள் விருப்பத்திற்கேட்ப QR Code படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
QR Code பயன்கள்:
QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு படமாக கிடைக்கும்.
அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும்.
அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode) செய்து, அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode செய்து பெற முடியும்.
QR Code Image-யில் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்?
QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data-க்களை QR Code படமாக மாற்ற முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |