QWERTY Keyboard History in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே கம்பியூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தி இருப்போம்.
இன்னும் சொல்லப்போனால் இன்றைய நிலையில் பலரும் கம்பியூட்டரில் தான் வேலை செய்து வருகிறோம். சரி நீங்கள் பயன்படுத்தும் கணினியை என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா..? அதில் QWERTY என்ற பெயர் இடம் பெற்றிருக்கும். இந்த QWERTY என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..? இதை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
Keyboard -ல் ‘F’ மற்றும் ‘J’ எழுத்துக்களில் ஏன் சிறிய கோடு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? |
QWERTY Keyboard History in Tamil:
1874 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று தான் ரெமிங்டன் தட்டச்சுப்பொறி (Remington Typewriter) கொண்டுவரப்பட்டது. அதாவது இந்த QWERTY என்ற விசைப்பலகை Christopher Latham Sholes என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளரால் கொண்டுவரப்பட்டது.
இந்த விசைப்பலகை தட்டச்சு செய்பவரை மெதுவாக செய்வதற்குப் பதிலாக வேகமாக தட்டச்சு செய்ய அனுமதிக்கிறது. இந்த விசைப்பலகையை வடிவமைப்பதில் Sholes மற்றும் Glidden என்ற இருவரும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்கள்.
விசைப்பலகையின் மேல் இடது மூலையில் உள்ள ஆங்கில எழுத்துக்கள் காரணமாக QWERTY என்ற பெயர் கொண்டுவரப்பட்டது.அதன் பின் இந்த தட்டச்சுப்பொறியை ஜூலை 1, 1874 இல் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் கொண்டுவந்த அந்த விசைப்பலகை அமைப்பை தான் இன்று நாம் பயன்படுத்தும் வருகிறோம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Power Button குறியீட்டுக்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா..?
Sholes அவர்கள் முதலில் வடிவமைத்த விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அகர வரிசைப்படி இருந்தன. அந்த நேரத்தில் இது போன்ற வடிவமைப்பு விசைப்பலகையை பயன்படுத்தும் போது, பயனர்கள் தங்களுக்கு தேவையான விசைகளை (Keys) தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
அதனால் Sholes இந்த விசைப்பலகையை மாற்றி வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். பின் 1874 ஆம் ஆண்டு சோல்ஸ் அவர்கள் நாம் தற்போது பயன்படுத்தி வரும் QWERTY Keyboard போன்ற ஒன்றை வடிவமைத்தார்.
ஆனால் QWERTY Keyboard -ல் சில விசைகள் (Keys) மாறியிருந்தன. குறைந்த திறன் கொண்ட எழுத்து அமைப்பைக் கண்டறிவதற்காகவும், மக்கள் வேகமாக தட்டச்சு செய்ய உதவும் வகையிலும் தான் இந்த விசைப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் தேவையான எழுத்துக்களில் விரல்களை வைப்பதன் மூலம் டைப் செய்ய முடிந்தது. இதே முறையில் தான் மற்ற எழுத்துக்களும் விசைப்பலகை முழுவதும் வைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
இந்த விசைப்பலகையில் எழுத்துக்களை அங்கும் இங்கும் மாற்றி வடிவமைத்து கடைசியாக QWERTY விசைப்பலகைக்காக 1878 ஆம் ஆண்டு Sholes அவர்கள் காப்புரிமை பெற்றார்.
Keyboard-ல ஏன் எழுத்துக்கள் வரிசையாக இல்லை காரணம் தெரியுமா..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |