உலர் திராட்சை பற்றிய தகவல்
நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் ருசியாக இல்லையென்றால் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று சொல்வோம். மாறாக இந்த பழம் எப்படி வந்தது, இதற்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். நாம் சாப்பிடும் பொருட்கள் மட்டுமில்லை எல்லா விஷயத்தையும் நாம் ஆராய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உலர் திராட்சையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உலர் திராட்சை என்றால் என்ன.?
உலர்திராட்சை என்பது வெயிலில் அல்லது டீ ஹைட்ரேட்டரில் உலர்த்தப்பட்ட திராட்சை ஆகும். அவை அளவு சிறியதாகவும், பழுப்பு நிறமாகவும், இனிப்பு, கசப்பான சுவை கொண்டதாகவும் இருக்கும். திராட்சை பொதுவாக பேக்கிங், சமையல் மற்றும் சிற்றுண்டியாக பயன்படுத்தப்படுகிறது. அவை டிரெயில் கலவைகள், கிரானோலா பார்கள் மற்றும் ஓட்மீல் குக்கீகளில் பிரபலமான மூலப்பொருளாக இருக்கிறது.
பெயர் வர காரணம்:
ரைசின் எனும் வார்த்தை பழம் பிரெஞ்சு மொழியிலிருந்து மத்திய ஆங்கிலத்தில் பெறப்பட்ட வார்த்தை ஆகும். நவீன பிரஞ்சில், ரைசின் என்பது “திராட்சை” எனப்படுவதுடன் உலரவைக்கபட்ட திராட்சை “உலர்திராட்சை” என்றழைக்கப்படும். புராதன பிரஞ்சு வார்த்தை, racemus “ஒரு திராட்சைகொத்து” எனும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும்.
உலர் திராட்சை மூலம் என்னனென்ன செய்யலாம்:
உலர் திராட்சையை பல பகுதிகளில் உரைப்பது செய்யப்படுகின்றன. இவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உலர்ந்த தங்கநிற திராட்சை “சுல்தானா ” எனவும், சிறியதும் உலர்ந்ததுமான விதையற்ற கருநிற கொரிந்து திராட்சை “திராட்சை வத்தல் ” எனவும் அழைக்கப்படுகின்றன.
உலர் திராட்சை பச்சை ,கருப்பு, பழுப்பு, ஊதா, மஞ்சள் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |